ஜாமீன் மனு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துவிட்டது.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்ட ஜெயேந்திரர் மீண்டும் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக சென்னைஉயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த ஜாமீன் மனு மீது கடந்த 2 நாட்களாக விசாரணை நடந்து வந்தது.
இன்று பிற்பகலில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்களது வாதத்தை முடித்துக் கொண்டனர். இதையடுத்து தீர்ப்பை தேதிகுறிப்பிடாமல் நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம் ஒத்தி வைத்தார்.
முன்னதாக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ். துல்சி வாதிடுகையில், போலீஸ் விசாரணையின்போதுசங்கரரராமனைக் கொலை செய்யச் சொன்னது நான்தான் என்பதை ஜெயேந்திரர் ஒத்துக் கொண்டுள்ளார். அதற்கான வீடியோஆதாரம் உள்ளது. நீதிமன்றம் சொன்னால் அதைப் போட்டுக் காட்டத் தயார்.
ரவி சுப்ரமணியம், அப்பு, கதிரவன் ஆகியோர் மூலம் சங்கரராமனை தீர்த்துக் கட்ட உத்தரவிட்டதாகவும் ஜெயேந்திரர் ஒத்துக்கொண்டுள்ளார். இதுவே ஜெயேந்திரர் மீதான குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரமாகும்.
இந்த வழக்கில் கதிரவன் கைது செய்யப்பட்டு விட்டார். ரவி சுப்ரமணியம், அப்பு ஆகியோர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக்கொண்டு, குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கைப் பொருத்தவரை கதிரவன் கொடுத்துள்ள வாக்குமூலத்தை கொண்டே ஜெயேந்திரரை தண்டிக்கவலுவான, போதுமான காரணம் உள்ளது.
தொடர் போலீஸ் விசாரணையால் தான் இந்தக் கொலையில் ஜெயேந்திரருக்கு உள்ள வலுவான தொடர்பு வெளிப்பட்டுள்ளது.எனவே இந்த நிலையில் ஜெயேந்திரரை ஜாமீனில் விடுதலை செய்தால் அது நீதியையும், விசாரணையையும் பாதிக்கும் என்றார்துல்சி.
ஆடிட்டர் வழக்கில்...
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கில் ஜெயேந்திரர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதானவிசாரணையும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் மனு தாக்கல்செய்துள்ளார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது உயர் நீதிமன்றத்தில் மற்றொரு ஜாமீன் மனு மீதுவிசாரணை நடப்பதால் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்று இரண்டாவது நாளாக மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரானவழக்கறிஞர் டி.வி.கணேஷ் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதும்உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.
எனவே இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 8ம் தேதி வரை தள்ளி வைக்க வேண்டும் என்றுவாதிட்டார்.
இதற்கு ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர் தினகரன் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டநீதிபதி முருகேசன், விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications