பஸ் கவிழ்ந்து 35 மனநலம் குன்றிய குழந்தைகள் காயம்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
கேரளத்தில் நடந்த பயங்கர பஸ் விபத்தில் 35 மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் காயமடைந்தனர்.
திருவனந்தபுரம் பெரூர்கடா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த அந்த பஸ் திடீரென தலைகுப்புற கவிழந்தது. இதில் பஸ்சில் இருந்த 35மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் இரு ஆசிரியர்களும் காயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உலக உடல் ஊனமுற்றோர் நல தினத்தையொட்டி, இந்தத் தனியார் பள்ளிக் குழந்தைகள், ஒரு விழாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதுஇந்த விபத்து நடந்தது.
பஸ்ஸை காட்டுத்தனமான வேகத்தில் டிரைவர் ஓட்டியது தான் விபத்துக்குக் காரணம் என்று தெரிகிறது.
பஸ் கவிழ்ந்ததில் பெரும் அதிர்ச்சியடைந்த அந்தப் பிஞ்சுகள் நடந்தது என்னவென்று கூடப் புரியாமல் தவித்தது, அதைக்கண்ட பலரையும் கண்கலங்க வைத்துவிட்டது.












Click it and Unblock the Notifications