மாதவன் வழக்கு: திருக்குறுங்குடி கோயிலில் விசாரணை
நெல்லை:
அர்ச்சகர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக திருக்குறுங்குடி கோயிலில் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணைநடத்தினார்கள்.
சங்கரராமன் கொலை வழக்கிலும், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டு வேலூர்சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
இந் நிலையில், திருக்கோட்டியூரை சேர்ந்த மாதவன் தாக்கப்பட்டதில் ஜெயேந்திரருக்கு தொடர்பு இருக்கிறதா என்று போலீஸார்தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் அழகியநம்பி கோயிலில் விஷ்ணு சிலையும், சிவன் சிலையும் உள்ளது.
இந்த கோயிலில் உள்ள சிவன் சிலையை அகற்றினால், தொழில் விருத்தி அடையும் என்று ஒரு பிரபல தொழிலதிபர்ஜெயேந்திரரிடம் கோரிக்கை விடுத்ததாகவும், அதனையடுத்து ஜெயேந்திரரின் ஆலோசனையின் பேரில் கடந்த ஜூலை மாதம்பெருமாள் சன்னதிக்கு எதிரே இருந்த சிவன் சன்னதி அப்புறப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது சைவர்கள் மத்தியில் கடும் சர்ச்சையை கிளப்பியது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கு தொடர்ந்தவர்களில் மாதவனும் ஒருவராவார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாதவன் நம்பி கோயிலுக்கு வந்தபோது அவருடன் அர்ச்சகர்கள் கடும் வாக்குவாதம்செய்ததாகவும், பின்னர் சென்னையில் மாதவன் தாக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
இந் நிலையில் மாதவன் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஜெயேந்திரருக்குத் தொடர்பிருக்கிறதா என்பதை விசாரிக்க தனிப்படையினர்திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு வந்தனர்.
அங்கு ஜீயர் சுவாமிகள், திருநாராயணன், சொக்கலிங்கம் பிள்ளை, முரளி, சிவன் சன்னதியை அகற்ற ஆதரவு தெரிவித்தவர்கள்மற்றும் எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
விசாரணையை முடித்து கொண்டு தனிப்படையினர் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications