ஆடிட்டர் வழக்கில் ஜாமீன்: 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரரின் ஜாமீன் மனு மீதான விசாரணை 6ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் சார்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது.
அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கணேஷ், டெல்லியில் இருந்து சிறப்பு வழக்கறிஞர் துல்சி ஆஜராகி வாதாட இருப்பதால், வருகிற 6-ம்தேதிக்கு விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கூறினார்.
அதற்கு ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதி முருகேசன் கூறுகையில் இந்த மனு மீதான விசாரணையை 6ம் தேதிக்கு தள்ளி வைக்கி றேன். அன்றைய தினம் வழக்குவிசாரணையை கட்டாயம் முடித்து கொள்ள வேண்டும். மீண்டும் தள்ளி வைக்க அனுமதிக்க மாட்டேன் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications