ரகுவிடம் போலீஸ் கேள்விகளால் ஒரு வேள்வி!
காஞ்சிபுரம்:
காஞ்சி இளைய மடாதிபதியான விஜயேந்திரரின் தம்பி ரகுவிடம் நேற்றும் மூன்றாவது நாளாக போலீசார்விசாரணை நடத்தினர்.
கடந்த இரு தினங்களான இரவு 7 மணிக்கு வரவழைத்து பல மணி நேரம் வரை விசாரித்து அனுப்பிய போலீசார்நேற்று காலாகாலத்தில் ரகுவை திருப்பி அனுப்பி வைத்துவிட்டனர்.
மாலை 4.10 மணிக்கு காட்டு பங்களா எனப்படும் எஸ்.பி. வீட்டுக்குப் பின்புறம் உள்ள வனத்துறைக்குச்சொந்தமான கட்டடத்துக்கு ரகுவை போலீசார் வரவழைத்தனர். இங்கு வைத்து எஸ்.பி. பிரேம்குமார் உள்ளிட்டஅதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பின்னர் 4.40 மணிக்கு ரகுவைத் திருப்பி அனுப்பி வைத்துவிட்டனர். காலையில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,தன்னை போலீசார் மனரீதியில் சித்திரவதை செய்வதாகவும், தனது அம்மா, அப்பா, சகோதரிகளைச் சொல்லிகெட்ட வார்த்தைகளால் திட்டியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந் நிலையில் ரகுவிடம் அரை மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்திவிட்டு திருப்பி அனுப்பி வைத்துள்ளதுபோலீஸ். அந்த அரை மணி நேரத்திலும் ரகுவுக்கு செம கவனிப்பு இருந்ததாக காவல்துறை வட்டாரங்கள்கூறுகின்றன.
கடந்த 3 நாட்களாக ரகுவிடம் மடத்தின் பெண் தொடர்புகள், ரெளடிகளின் தொடர்புகள், நீ ஏன் பெண்கள்விடுதிக்குப் போனாய், உன் அண்ணனான விஜயேந்திரருக்கு பெண்கள் விடுதியில் என்ன வேலை,
அங்குள்ள இரண்டு ஏசி அறைகளில் இருந்து கொண்டு நீங்கள் செய்த வேலைகள்-கம்-லீலைகள் என்ன என்பதுபோன்ற கேள்விகளால் ரகு புரட்டி எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தக் கேள்விகளுக்கு ஒழுங்காக பதில் சொல்லாதபோதெல்லாம் ரகுவே கூறியுள்ளபடி உவ்வே ரகவார்த்தைகளால் அர்ச்சனைகள் கிடைத்துள்ளன.
அப்ரூவராக நெருக்கடியா?:
சங்கராச்சாரியாருக்கு எதிராக அப்ரூவராக மாறுமாறு போலீஸ் தரப்பில் இருந்து நெருக்குதல் தரப்படுவதாகதகவல்கள் வருகின்றன. அப்ரூவரானால் இளையவரும் நீயும் தப்பலாம், இல்லாவிட்டால் சிக்கல் என்று போலீசார்நெருக்குவதாக ரகு தரப்பு ஆட்கள் கிசுகிசுக்கின்றனர்.
ஆனால், சங்கராச்சாரியாருக்கு எதிராக நான் அப்ரூவராக மாட்டேன் என்று ரகு கூறிவிட்டதாகவும் அவர்கள்கூறுகின்றனர்.
ஆனால், இந்தச் செய்திகளை போலீசார் முழுக்க முழுக்க மறுக்கின்றனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications