மசூதி நிலம் ஆக்கிரமிப்பு: அப்பு மீது மேலும் ஒரு புகார்
சென்னை:
மசூதி ஒன்றுக்கு சொந்தமான 94 ஏக்கர் இடத்தை ஆக்ரமித்த சங்கர் என்பவருக்கு ஆதரவாக மசூதியின் நிர்வாக கமிட்டியினரை அப்புமிரட்டியதாக புகார் கூறப்பட்டுள்ளது.
சென்னை, போரூரில் ஷேக் மானியம் என்ற பகுதி உள்ளது. மசூதி மற்றும் முஸ்லிம் மக்களின் பயன்பாட்டுக்காக ஆற்காடு நவாப் பல ஏக்கர்நிலங்களை மானியமாக கொடுத்ததால் இந்த பகுதி ஷேக் மானியம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த இடத்தில் மஸ்ஜிதே கைருன்னிசா அரபி பாடச்சாலை மற்றும் மசூதி உள்ளது. 300 ஆண்டுகள் பழமையான மசூதிக்கு சொந்தமானஇந்த நிலத்தை தற்போது சங்கர் என்பவர் ஆக்கிரமித்துள்ளார்.
இந்த நிலத்தை மீட்க தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந் நிலையில் இந்த வழக்கு விவகாரங்களை கவனித்துவரும் இந்திய முஸ்லிம் கழக மாநில தலைவர் அப்துல் காதர் மற்றும் பள்ளி வாசல் தலைவர் அப்துல் கரீம் ஆகியோருக்கு கடந்த சிலமாதங்களாக தொலைபேசி மிரட்டல்கள் வந்தன.
இது தொடர்பாக இருவரும் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு புகார்கொடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அப்துல் காதர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆற்காடு நவாப் மானியமாக கொடுத்த இந்த நிலத்தை, 65 ஆண்டுகளுக்கு முன்பு சங்கர் குடும்பத்தினர் போலி பட்டா மற்றும் பத்திரம்தயாரித்து அபகரித்துக் கொண்டனர்.
இது தொடர்பாக 1970-ம் ஆண்டு பூந்தமல்லி முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனாலும் இந்த இடத்தை பிளாட் போட்டுவிற்பதற்காக சி.எம்.டி.ஏ. ஒப்புதல் பெற்று பிளாட் போட்டு விற்று வருகிறார்கள்.
கடந்த 1992-ம் ஆண்டு வக்பு வாரியம் இந்த நிலத்தை கையகப்படுத்தி நோட்டீஸ் அளித்தது. இதே வழக்கில் உயர் நீதிமன்றத்தில்எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் தற்போது உச்ச நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர்.
சங்கருக்கு ஆதரவாக அப்புவும், அவனது கூட்டாளிகளும் செயல்பட்டு வந்தனர். அப்போது சிலர் எங்களது வீடுகளுக்கு தபால்காரர் போல்சிலர் வந்து அடிக்கடி நோட்டம் விட்டனர். தொலைபேசியில் கொலை மிரட்டல் வந்தது. இதையடுத்து எங்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்று காஞ்சிபுரம் எஸ்.பி. மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு புகார் மனு கொடுத்துள்ளோம்.
தற்போது ஜெயேந்திரர் கைதுக்கு பிறகு இந்த பகுதியில் அப்புவின் நடமாட்டமும், அவர்களது கூட்டாளிகளின் நடமாட்டமும்குறைந்துள்ளது.
இந்த இடத்தை பிளாட் போட்டு விற்க ஜெயேந்திரர் தலைமையில் பூமி பூஜை நடத்த சங்கர் திட்டமிட்டார். அதற்காக ஜெயேந்திரரின்ஆளுயர கட்--அவுட்டும், போஸ்டர்களும் அச்சடித்து ஒட்டியிருந்தனர். ஆனால் அவர் கைது செய்யப்பட்ட பிறகு அவை அனைத்தும்அகற்றப்பட்டுவிட்டன.
இப்போது பூமி பூஜை போடமலேயே இடத்தை விற்று வருகிறார் சங்கர் என்றார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications