ஜெயேந்திரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

Jayendrar ஜாமீன் கோரி சங்கராச்சாரியார் செய்துள்ள மனுவுக்கு ஜனவரி 6ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

அதுவரை சங்கராச்சாரியாருக்கு ஜாமீன் வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம்நிராகரித்துவிட்டது.

அதே போல ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கில் சங்கராச்சாரியார் தாக்கல் செய்த மனுவை உடனே விசாரிக்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம்இது தொடர்பாக முதலில் உயர் நீதிமன்றத்தைத் தான் சங்கராச்சாரியார் அணுக வேண்டும் என்று கூறிவிட்டது.

மேலும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

3 நீதிபதிகள் பெஞ்ச்:

சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தலைமை நீதிபதி லஹோத்தி, நீதிபதி மாத்தூர், நீதிபதி நோலேகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவைவிசாரித்தது.

அப்போது ஜெயேந்திரரின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்த வழக்குவிசாரணை மீண்டும் ஜனவரி 6ம் தேதி நடக்கும் என்று அறிவித்தனர்.

இடைக்கால ஜாமீன் கோரிக்கை:

அப்போது பேசிய ஜெயேந்திரரின் வழக்கறிஞர் பாலி நரிமன், இந்த வழக்கு விசாரணை ஒரு பக்கம் நடந்தாலும், ஜெயேந்திரருக்கு ஜாமீன்வழங்கி இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்க வேண்டும். சங்கராச்சாரியார் மடத்துக்குச் செல்லவும் வழக்கமான பூஜைகள் நடத்தவும்அனுமதிக்கப்பட வேண்டும்.

சங்கராச்சாரியார்கள் தனுர்மாஸ்ய பூஜைகளை கட்டாயம் நடத்த வேண்டும். அதற்காகவாவது அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கலாம்.வேண்டுமானால் போலீசார் கூட பாதுகாப்புக்கு இருக்கலாம் என்றார்.

ஆனால், அந்த வேண்டுகோளை நீதிபதிகள் நிராகரித்தனர். சங்கராச்சாரியாருக்கு ஜாமீன் மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி10 நாட்களாகிவிட்டன. ஏன் இவ்வளவு தாமதமாக இந்த அப்பீல் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தீர்கள் என்று கேட்ட நீதிபதிகள்இடைக்கால ஜாமீன் எல்லாம் வழங்க முடியாது என்று கூறினர்.

உத்தரவு முழு விவரம்:

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:

அடுத்த கட்ட விசாரணைக்கு ஏதுவாக வழக்கின் மொத்த விவரங்களையும் கேஸ் டைரியையும் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஜனவரி 6ம் தேதிக்கு முன்பாக நீதிமன்றத்தில் தமிழக போலீசார் ஒப்படைக்க வேண்டும்.

கூலிப் படையினரால் தாக்கப்பட்ட சங்கரராமன் மரணமடைவதற்கு முன் தந்ததாகக் கூறப்படும் மரண வாக்குமூலத்தையும் நீதிமன்றத்தில்ஒப்படைக்க வேண்டும். அந்த வாக்குமூலத்தை பதிவு செய்தது யார் என்ற விவரத்தையும் போலீஸ் தெரிவிக்க வேண்டும்.

ஐசிஐசிஐ வங்கியிருந்து பணம் எடுக்கப்பட்டு கொலையாளிகளுக்குத் தரப்பட்டதாகக் கூறப்படுவது முழு விவரத்தையும் தர வேண்டும்.அந்தக் கணக்கு யாருக்குச் சொந்தமானது, அது யார் பெயரில் இயக்கப்படுகிறது, குறிப்பிட்ட தினத்தன்று பணத்தை எடுத்தவர் யார் போன்றவிவரங்களைத் நீதிமன்றத்திடம் போலீஸ் தர வேண்டும். அதே போல அந்த வங்கிக் கணக்கின் பாஸ் புத்தகத்தையும் போலீசார் ஒப்படைக்கவேண்டும்.

அதே போல இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கதிரவன் மற்றும் சின்னா என்ற ரஜினிகாந்த் ஆகியோர் காஞ்சிநீதிமன்றத்தில் அளித்த கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தையும், பின்னர் அவர்கள் பல்டி அடித்துக் கூறிய வாக்குமூலத்தின் முழுவிவரத்தையும் சமர்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறினர்.

அப்போது பேசிய ஜெயேந்திரரின் வழக்கறிஞர் பாலி நரிமன், ஒப்புதல் வாக்குமூலம் தந்த இந்த இருவரும் பின்னர் பல்டிஅடித்துவிட்டதை சுட்டிக் காட்டி இதனை சாட்சியமாக ஏற்கக் கூடாது என்றார்.

ஆடிட்டர் வழக்கு:

அதே போல ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி சங்கராச்சாரியார் தாக்கல் செய்த 2வது ஜாமீன் மனுவைஜனவரி 6ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

அப்போது பேசிய தமிழக அரசின் வழக்கறிஞர் துல்சி, இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தையே அணுகாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில்சங்கராச்சாரியார் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார் என்றார். இதையடுத்துப் பேசிய நீதிபதிகள், ஜாமீன் கோரி முதலில் உயர்நீதிமன்றத்தைத் தான் சங்கராச்சாரியார் அணுக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

சிபிஐ விசாரணை கோரிக்கை நிராகரிப்பு:

அதே போல சங்கரராமன் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரி யோகேந்திர திவாரி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த மனுவுக்கு ஜெயேந்திரரின் ஒப்புதலை திவாரி பெறாததால் மனு தள்ளுபடிசெய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+