ஆந்திராவில் அப்பு சரண்: காஞ்சி கொண்டு வரப்படுகிறார்
சித்தூர்:
சங்கரராமன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான அப்பு ஆந்திராவில் தமிழக போலீஸ் படையிடம்சரணடைந்தார்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் காஞ்சிபுரம் கொண்டு வரப்படுகிறார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பாலகிருஷ்ணபுரம் என்ற இடத்தில் உள்ள தனது மைத்துனரின் வீட்டில் வைத்து காஞ்சிபுரம்மாவட்ட சிறப்புப் போலீஸ் படையிடம் அப்பு இன்றிரவு சரணடைந்தார்.
இவரைக் கைது செய்ய 20 பேர் கொண்ட தமிழக கமாண்டோ படை இன்று பகலில் அங்கு விரைந்தது.
முன்னதாக அவர் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் காண்ட்ராக்டர் ரவி சுப்பிரமணியத்துடன்சரணடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந் நிலையில் மைத்துனர் வீட்டில் வைத்து தமிழக போலீசிடம் அப்புசரணடைந்துள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
கைதானபோது தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அப்பு அளித்த பேட்டியில், சங்கரராமன் கொலையில் எனக்கோ காஞ்சிசங்கராச்சாரியாருக்கோ எந்தத் தொடர்பும் இல்லை. சங்கர மடத்தின் பெயரைக் கெடுப்பதற்காக இந்தப் பொய் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்றார்.
காஞ்சி நீதிமன்ற நீதிபதியிடம் இரவோடு இரவாக அப்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என்று தெரிகிறது.
ஆனால், இந்தக் கைதையோ அவர் காஞ்சி கொண்டு வரப்படுவதையோ தமிழக போலீசாரோ ஆந்திர போலீசாரோ உடனடியாகஉறுதிப்படுத்தவில்லை. முன்னதாக ஓரிடத்தில் சரணடைவதாகச் சொல்லிவிட்டு பின்னர் தமிழக போலீஸ் வருகையில் அப்புதப்பியோடிதாகவும் இதையடுத்து அவரை போலீசார் விரட்டிச் சென்று மைத்துனர் வீட்டில் வைத்து அமுக்கியதாகவும்கூறப்படுகிறது.
அப்புவின் சரண்டரைத் தொடர்ந்து ரவி சுப்பிரமணியமும் விரைவில் சரணடைய வாய்ப்புள்ளது.
காஞ்சி திரும்பிய விசாரணை அதிகாரிகள்:
இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரின் ஜாமீன் மனு மீதான விசாரணைக்காக டெல்லி சென்றிருந்தவிசாரணை அதிகாரிகள் எஸ்.பி, பிரேம் குமார், கூடுதல் எஸ்.பி. சக்திவேல் ஆகியோர் விமானம் மூலம் சென்னை திரும்பினர்.
பின்னர் அவர்கள் காஞ்சிபுரம் சென்றனர்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications