ஆடிட்டர்: உயர்நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் ஜாமீன் மனு
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர்சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள ஜெயேந்திரர் அந்த வழக்கில் தாக்கல் செய்த ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை அவர் அணுகியுள்ளார்.
இந் நிலையில், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கில் அவரது ஜாமீன் மனுவை சென்னை செஷன்ஸ்நீதிமன்றம் நிராகத்து விட்டது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் முதலில் உயர் நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. இதையடுத்துஜெயேந்திரர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், என்னிடம் போலீசார் விசாரணை நடத்தி முடித்துவிட்டனர். இனியும் விசாரிக்க ஏதுமில்லை. போலீஸ்விசாரணைக்கு நான் எந்த வகையிலும் தடையாக இருக்கப் போவதில்லை. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டஎனக்கு தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுகிறது.
குற்றவாளிகளின் அடையாள அணிவகுப்பு கூட நடந்து முடிந்துவிட்டது. ஜாமீன் கொடுத்தால் எங்கும் ஓடிப்போய்விட மாட்டேன். ஜாமீனை எந்த விதத்திலும் தவறாகப் பயன்படுத்த மாட்டேன்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம் முன்னிலையில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications