டைரி, காலண்டர் தயாரிப்பில் சிவகாசி பிசி!
Subscribe to Oneindia Tamil
சிவகாசி:
குட்டி ஜப்பான் சிவகாசி காலண்டர், டைரிகள் தயாரிப்பில் படு பிசியாக உள்ளது.
பட்டாசுகள், தீப்பெட்டிகள் தயாரிப்பில் நாட்டின் முன்னணி நகரமாக விளங்கும் சிவகாசியில் புத்தாண்டையொட்டிகாலண்டர்கள், டைரிகள் ஆகியவற்றை அச்சிடும் பணி படு தீவிரமாக நடந்து வருகிறது.
இங்கு தயாராகும் காலண்டர்கள், டைரிகள் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதிசெய்யப்படுகிறது.
இந்த ஆண்டு ரூ. 40 முதல் ரூ. 500 வரை விலையுள்ள டைரிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல,இதுவரை இல்லாத அளவுக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் இந்த ஆண்டு மிக அதிகமாகியுள்ளதாம்.
இங்கிலாந்து, கனடா, மொரீஷியஸ், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு சிவகாசி காலண்டர்கள், டைரிகள்செல்கின்றன. காகித விலை உயர்வு காரணமாக காலண்டர்கள், டைரிகளின் விலை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications