மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு போலீஸ் ஹெல்ப் லைன்
சென்னை:
த்ரிஷாவின் குளியல் காட்சிகள் மாதிரியான ஆபாசப் படங்கள் இணையதளத்தில் வராமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றுசென்னை போலீஸ் கமிஷனர் நடராஜ் கூறினார்.
பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
நர்ஸ் அனிதா கொலை வழக்கில் குற்றவாளிகளை போலீஸ் படை தீவிரமாகத் தேடி வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அஸ்வின்தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பதை அறிய பிரேத பரிசோதனை அறிக்கைக்காககாத்திருக்கிறோம்.
இந்த வழக்கு தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸார் பெங்களூர் உள்பட பல இடங்களுக்கு சென்றுவிசாரணை மேற்கொண்டு வருகின்றன.
த்ரிஷாவின் குளியல் காட்சிகள் தொடர்பான புகார் எதுவும் எங்களுக்கு வரவில்லை. ஹைதராபாத் போலீசில் அவர் புகார் செய்துஇருப்பதாக பத்திரிக்கைகள் மூலம் தெரிந்து கொண்டோம். இருப்பினும் அது மாதிரியான ஆபாசப் படங்கள் இணைய தளத்தில் வராமல்இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கேமிரா செல்போன்களைப் பயன்படுத்தத் தடைவிதித்தது போல் பொது மக்கள் அதிகம் வந்துசெல்லும் பகுதிகளில் உடனடியாகத் தடை விதிக்க முடியாது.
கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதையொட்டி சென்னை சாந்தோம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, எழும்பூர், லிட்டில் மவுண்ட் ஆகிய பகுதிகளில்உள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போலீஸ் சார்பில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஒரு உதவி மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்தொலைபேசி எண்ணும் 100 தான்.
இதற்குத் தகவல் கொடுத்தால் போலீஸாரும், தொண்டு நிறுவனத்தினரும் விரைந்து வந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச்சென்று மருத்துவமனையில் சேர்ப்பார்கள் என்று கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications