ரஜினியின் எழுச்சி, தமாகாவுக்கு அஸ்திவாரம் போட்ட ராவ்
சென்னை:
இந்திய அரசியலில் தனி முத்திரை பதித்த நரசிம்ம ராவ், தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர், தமிழக மக்களால்அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாதவர்.
1991ல் நரசிம்மராவ் பிரதமராக டெல்லியில் பதவியேற்ற காலத்தில் தமிழகத்தில் முதல்வராகப் பொறுப்பேற்றார் ஜெயலலிதா.காங்கிரஸும், அதிமுகவும் அப்போது தமிழகத்தில் கூட்டணி அமைத்திருந்தன.
ராஜீவ் படுகொலையால் ஏற்பட்ட அனுதாபத்தால் இந்தக் கூட்டணிக்கு சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றிகிடைத்தது. தேர்தல் முடிந்து சில மாதங்களிலேயே ஜெயலலிதாவின் போக்கு மாறத் தொடங்கியது.
காங்கிரஸிடமிருந்து அவர் விலகத் தொடங்கினார். காங்கிரஸ் தலைவர்களை அவர் விமர்சித்தார். மத்திய அரசுக்குத் தந்து வந்த ஆதரவைவிலக்கப் போவதாக மிரட்ட ஆரம்பித்தார். சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்குக் கிடைத்த வெற்றிக்கு ராஜீவ் படுகொலை காரணமல்லஎன்றும் பேசத் தொடங்கினார்.
இதையடுத்து தமிழக ஆளுநராக சென்னா ரெட்டியை நியமித்த ராவ் அவர் மூலமாகவும், ஜனதா கட்சித் சுப்பிரமணியம் சுவாமிக்குகேபினட் அந்தஸ்தில் ஒரு பதவியும் கொடுத்து அவரையும் சென்னையில் தங்க வைத்து ஜெயலலிதாவுக்கு தலைவலி தர ஆரம்பித்தார்.
சுப்பிரமணியம் சுவாமி, சென்னா ரெட்டி மற்றும் திமுக தலைமையில் எதிர்க் கட்சிகள் தொடர்ந்து அதிமுகவுக்கு நெருக்கடி தந்தன.ஜெயலலிதா-சசிகலா மீது பல வழக்குகள் பாய்ந்தன. இதற்கு ராவின் முழு ஆசியும் இருந்தது. அமுலாக்கப் பிரிவை வைத்து சசிகலாகுடும்பத்தினரின் பொருளாதார குற்றங்களை விசாரிக்க வைத்தார் ராவ்.
இதன்மூலம் அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். ராவை எதிர்த்தாலும் அவருடன் மோதும் அளவுக்குஜெயலலிதாவுக்கு துணிச்சல் வரவில்லை.
இந் நிலையில்தான் அவருக்கு வாழப்பாடி ராமமூர்த்தி உருவில் உற்ற தோழமை கிடைத்தது. அப்போது காவிரிப் பிரச்சினை பெரிதாகத்தொடங்கிய நேரம். நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கத் தவறியதைக் கண்டித்து மத்திய அமைச்சரவையிலிருந்துவாழப்பாடி ராமமூர்த்தி தனது பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
வாழப்பாடியாரின் ராஜினாமா முடிவை ஜெயலலிதா பகிரங்கமாக வரவேற்றார். அன்று முதல் காங்கிரஸ், அதிமுக இடையே பிளவு ஏற்படத்தொடங்கியது.
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மூப்பனார் (அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்தவர் குமரி அனந்தன்) தலைமையில் ஜெயலலிதாவுக்குஎதிராக திரண்டனர். பகிரங்கமாக ஜெயலலிதாவை கண்டித்துப் பேசத் தொடங்கினர்.
இவற்றிற்கெல்லாம் உச்சமாக நடிகர் ரஜினிகாந்த் ஜெயலலிதாவுக்கு எதிராக கிளம்பியது தமிழக அளவில் மட்டுமல்லாது தேசிய அளவிலும்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக தலைவர் கருணாநிதி, மூப்பனார் உள்ளிட்ட பல்வேறு தமிழக தலைவர்கள் ரஜினியின் ஆதரவுக்காகதவம் இருந்த நேரம் அது.
இந் நிலையில் 1996ம் ஆண்டு பொதுத் தேர்தல் நெருங்கி வர திடீரென ஜெயலலிதாவின் நிலையில் மாற்றம். காங்கிரஸ் கூட்டணிஇல்லாவிட்டால் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி உறுதி என்று நம்பிய அவர், காங்கிரசை அட்ஜஸ்ட் செய்து கொண்டு போக ஆரம்பித்தார்.ராவின் மகன்கள் மூலமாக சமரச முயற்சிகளில் ஜெயலலிதா ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
தேர்தலில் அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை என்றுதான் மக்கள் மத்தியில் கருத்து நிலவி வந்தது. அதிமுகவுடன்கூட்டணி வைக்கக் கூடாது என்று மூப்பனார் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லி சென்று ராவை சந்தித்துக் கோரிக்கை விடுத்தனர். ரஜினியும்ராவை சந்தித்துப் பேசினார்.
அதிமுகவுடன் கூட்டணி வராது, திமுகவுடன்தான் கூட்டணி என்று தமிழகத்தில் உள்ள அத்தனை பேரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில்குண்டைப் போட்டார் ராவ். ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன்தான் கூட்டணி என்று அவர் கூறியது தமிழக காங்கிரஸார்மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதுவரை அதிரடி அரசியல் நடத்திப் பழக்கமில்லாத மூப்பனார், வெகுண்டெழுந்தார். ப.சிதம்பரம், கருணாநிதி உள்ளிட்டோரின்ஆலோசனையுடனும், ரஜினி கொடுத்த தெம்பினாலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார்.
திமுகவுடன் கூட்டணி வைத்து தமிழ் மாநில காங்கிரஸ் சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தலை சந்தித்தது. மிகப் பெரும் வெற்றியையும்பெற்று தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெறும் நடிகராக இருந்து வந்த ரஜினிகாந்த் பெரும் முக்கியத்துவம் பெறக் காரணமாக அமைந்தது அந்த சட்டசபைத் தேர்தலில் ரஜினியின்ஆதரவு பெற்ற திமுக-த.மா.கா. கூட்டணி மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது.
அதேபோல, லேசில் முடிவெடுக்காமல் தள்ளிப் போட்டே பழக்கப்பட்ட மூப்பனாரை வெகுண்டெழுந்து அதிரடியாக ஒரு கட்சியைஆரம்பிக்க தூண்டியது ராவ்தான். இப்படி தமிழக அரசியலிலும் பல அதிரடி மாற்றங்களுக்கு ஒரு முக்கிய காரணமாக விளங்கினார் ராவ்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications