கமிஷன் பார்ட்டியா சுந்தரேச அய்யர்?
சென்னை:
சுந்தரேச அய்யரை போலீசார் அடிக்கடி கூப்பிட்டு விசாரிப்பதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
இப்போது போலீசாரின் கஸ்டடியில் இருப்பதாகக் கருதப்படும் ரவி சுப்பிரமணியம் போலீசிடம் பிடிபடும் முன் நக்கீரன் நாளிதழுக்குபோபாலில் தனது மறைவிடத்தில் இருந்தபடி தந்துள்ள தொலைபேசி பேட்டியில் கூறியுள்ள மேலும் சில தகவல்கள்:
நான் சங்கர மடத்துக்கு கட்டட காண்ட்ராக்டர் என்ற வகையில் தான் பழக்கமானேன். ஆனால், கடைசியாக ரூ. 1 கோடிக்கும் அதிகமானபில் எனக்கு செட்டில் செய்யப்பட வேண்டியுள்ளது. நான் கட்டித் தந்த கட்டடத்துக்கு இன்னும் பணத்தைத் தரவில்லை.
சுந்தரேச அய்யருக்கு நான் உரிய கமிஷன் தர மறுத்ததால் அந்த பில்லை கிளியர் செய்யாமல் இருந்தார் என்று கூறியுள்ள ரவி, இந்தகொலை விவகாரத்தால் நொந்து போய் தற்கொலைக்கு செய்ய முடிவு செய்ததாகவும் ஆனால் இப்போது அந்த எண்ணத்தைக்கைவிட்டுவிட்டதாகவும் கூறியுள்ளான்.
மேலும் விரைவில் போலீசிடம் சரணடையத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறான் ரவி.
இந்தப் பேட்டிக்குப் பின் போலீசிடம் ரவி சரணடைந்துவிட்டதாகவே தெரிகிறது. போலீசாருக்கு போபாலில் இருந்து ரவியின் பெயரில் ஒருதற்கொலை மிரட்டல் கடிதம் வந்ததும் நினைவுகூறத்தக்கது.
இப்போது ரவியை போலீஸ் தனது கட்டுப்பாட்டில் வைத்து விசாரிப்பதாகக் கூறப்பட்டாலும் அதை இன்றைய தினம் வரை போலீஸ்உறுதிப்படுத்தவில்லை.
ஆனால், சுந்தரேச அய்யரை போலீசார் ஏன் இப்படி கஜினி முகமது ரேஞ்சுக்கு சளைக்காமல் மீண்டும் மீண்டும் வரவழைத்துவிசாரிக்கின்றனர் என்பதற்கு ரவியின் பேட்டியில் கூறப்பட்டுள்ள கமிஷன் விவகாரமே காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.
மடத்தின் நிதி நிர்வாகத்தை முழுமையாக அவரே கையாண்டார் என்பதால் கொலையாளிகளுக்கு பணம் கூட அய்யருக்குத் தெரியாமல்போயிருக்க வாய்ப்பே இல்லை என்று போலீஸ் நம்புகிறது.
ஜெயேந்திரர் சொன்னார்.. கதையை முடித்தோம்: ரவி
-
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
சொத்து பதிவு பிரச்சனைக்கு தீர்வு.. STAR 3.0 மூலம் தமிழக பதிவுத்துறை கொண்டுவந்த புதிய வசதி -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
தாய்மாமன் என வசனம் பேசிய விஜய்.. குழந்தைகள் பாலியல் மிருகங்களிடம் சீரழிவதை வேடிக்கை பார்க்கிறாரா? -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications