ஆந்திராவில் 200, கேளரத்தில் 86 பேர் பலி
ஹைதராபாத்:
ஆந்திர மாநிலத்தில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடல் நீர் புகுந்ததில் 200 பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும்ஆயிரக்கணக்கானவர்களைக் காணவில்லை. கேரள மாநிலத்தில் 86 பேர் பலியாகிவிட்டனர்.
பிரகாசம் மாவட்டத்தில் 15 பேரும், கிருஷ்ணா மாவட்டத்தில் 25 பேரும், வட கோதாவரி மாவடத்தில் 3 பேரும், நெல்லூர் மாவட்டத்தில் 4பேரும், ஸ்ரீகக்கூலம் மாவட்டத்தில் 5 பேரும் இறந்தனர். சித்தூர், மச்சிலிப்பட்டிணம் ஆகிய கடலோர மாவட்டங்களும் மிக மோசமாகபாதிக்கப்பட்டுள்ளன.
தாழ்வான பகுதிகளில் குடியிருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாக ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிதெரிவித்தார். அவர் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் பார்வையிடுகிறார்.
இன்று காலை 6.45 மணியளவில் ஆந்திர கடலோரத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடல் நீர் புகுந்தது. அதே போலதிருப்பதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதே போல மேற்கு வங்கத்திலும் சிட்டகாங் துறைமுகத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.2 என்ற அளவுக்கு நில நடுக்கமும் அதைத் தொடர்ந்துகடல் கொந்தளிப்பும் ஏற்பட்டதில் நாடியா மாவட்டத்தில் ஒருவர் பலியானார். மேலும் பலரைக் காணவில்லை.
கேரளாவில் 86 பேர் பலி:
கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 67 பேரும், ஆலப்புழாவில் 16 பேரும், எர்ணாகுளத்தில் 3 பேரும் பலியானார்கள்.100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதே போல ஒரிஸ்ஸாவின் கட்டக் துறைமுகப் பகுதியிலும் கடல் நீரில் பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த மாநிலங்களின் ஒட்டுமொத்த உயிர்ச சேதம் முந்நூறைத் தாண்டும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications