தமிழகம், ஆந்திராவுக்கு மருத்துவ குழுக்கள் விரைவு
டெல்லி:
கடல் கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க இரண்டு மருத்துவக் குழுக்களை தமிழகம், ஆந்திரா, புதுவைமாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அனுப்பி வைத்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
டாடர் பத்ரிநாத் தலைமையில் ஒரு குழு பாண்டிச்சேரி விரைந்துள்ளது. இவருடன் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர்டாக்டர் ரெட்டி இணைந்து செயலாற்றுவார்.
சென்னை மற்றும் ஹைதாராபாத்தில் உள்ள மத்திய அரசின் சுகாதாரத் துறை மண்டல இயக்குநர்கள் அந்தந்த மாநில மருத்துவர்களுடன்இணைந்து மருத்துவ சிகிச்சையில் ஈடுபடுவர்.
தற்போது வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி உடனே நாடு திரும்புகிறார்.
இதற்கிடையே அவசர சிகிச்சை பிரிவு இயக்குநர் டாக்டர் ரவீந்தரன் தலைமையில் அவசர சிகிச்சை கட்டுப்பாட்டு மையம் டெல்லியில்அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொலைபேசி எண்கள் 011-23017457 மற்றும் 011-23017302. இந்த எண்களுக்குத் தொடர்பு கொண்டுதேவையான தகவல்களைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications