பாண்டிச்சேரியில் 102 பேர் பலி
பாண்டிச்சேரி:
நிலநடுக்கம் காரணமாக உருவான கடற்கொந்தளிப்பில் பாண்டிச்சேரி மாநிலத்தில் 102 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் அதிகமானவர்கள்காயமடைந்தனர்.
இன்று காலை சென்னையில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதில் வங்காள விரிகுடாகரையோரங்களில் கடல்நீர் புகுந்து நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள்.
பாண்டிச்சேரியில் மட்டும் 20 பேர் உயிரிழந்தனர். காரைக்கால் பகுதியில் 42 பேரும், அண்டை மாவட்டங்களில் 15 பேரும்பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயத்துடன் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடல்நீர் புகுந்தது. 10,000க்கும் மேற்பட்டோர் வீடிழந்தனர். முதல்வர் ரங்கசாமி பாதிக்கப்பட்டபகுதிகளுக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டார். காரைக்கால் செல்லும்முன்பு நிருபர்களுக்குப் பேட்டியளித்தரங்கசாமி,
கடல் கொந்தளிப்பு காரணமாகவே இந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட மத்தியஉள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் நாளை பாண்டிச்சேரி வருகிறார் என்று கூறினார்.
தாழ்வான பகுதிகளில் குடியிருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், வீடுஇழந்தவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கல்வித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன்தெரிவித்தார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications