போலி "பட்டதாரி ஆசிரியர்" கைது
சென்னை:
பத்தாவது வகுப்பு மட்டுமே படித்த ஒருவர், கடந்த 6 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியராகப்பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவொற்றியூர் சாலையில் உள்ள மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியில் விஜயக்குமார் என்பவர் கடந்த 6 ஆண்டு காலமாகஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இவரது ஆசிரியர் பயிற்சி பட்டய சான்றிதழை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தபோது அது போலியான சான்றிதழ் என்று தெரியவந்தது. இதைத் தொடர்ந்து விஜயக்குமார் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.
போலீஸார் விஜயக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் 10வது வகுப்பு மட்டுமே படித்தவர் என்பது தெரியவந்தது.ஜேம்ஸ் என்பவர் விஜயக்குமாருக்கு போலி சான்றிதழைத் தயாரித்து தந்துள்ளார். இதற்காக ஜேம்ஸுக்கு, விஜயக்குமார் ரூ. 25,000 பணம்கொடுத்துள்ளார்.
தற்போது ஜேம்ஸையும் போலீஸார் கைது செய்துள்ளனர். பத்தாவது வகுப்பு மட்டுமே படித்த ஒருவர், மாநகராட்சி பள்ளியில் கடந்த 6வருடமாக வேலை பார்த்து வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications