5 நாடுகளுக்கு இந்தியா உதவிக் கரம்
டெல்லி:
தானும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தாலும் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட இலங்கை, இந்தோனேஷியா உள்ளிட்ட 5நாடுகளுக்கு இந்தியா நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது.
இலங்கை, இந்தோனேஷியா, மாலத்தீவு, தாய்லாந்து மற்றும் மலேஷியா ஆகிய நாடுகளுக்கு இந்திய நிவாரணப் பொருட்கள்அனுப்பப்படுகின்றன. இது தொடர்பாக அந் நாடுகளின் அதிபர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, மாலத்தீவு அதிபர் அப்துல் கயூம் ஆகியோருடன் தொலைபேசியிலும் சிங் பேசினார்.
மாலத் தீவுகளுக்கு பிஸ்கட், பால் பவுடர், உலர வைக்கப்பட்ட உணவு வகைகள் என 20 டன் பொருட்களையும், மருத்துவக் குழுக்களையும்இந்தியா அனுப்புகிறது. இரு ராணுவ சரக்கு விமானங்களில் இந்த உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும் மேற்கூறிய 5 நாடுகளிலும் வாழும் இந்தியர்களின் நலனில் கவனம் செலுத்துமாறும், பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்குத்தேவையான உதவிகளைச் செய்யுமாறும் அங்குள்ள இந்தியத் தூதரகங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
அந்தமானில் இருந்து காயமடைந்தவர்களையும் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகளையும் மீட்டு வர சென்னையில் இருந்து 5 விமானங்கள்அனுப்பப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications