For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிவாரண நிதிக்கு கருணாநிதி ரூ. 1 கோடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Sonia meets Karunanidhi in hospital

கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பிரதமரின் நிவாரண நிதிக்கு திமுக தலைவர் கருணாநிதி ரூ1கோடி உதவி நிதி வழங்கியுள்ளார்.

கருணாநிதியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று காலை அப்பல்லோ மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

அப்போது அவரிடம் கடல் கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பிரதமரின் பொதுதேசிய நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளையின் சார்பில் ரூ. 1 கோடிக்கான காசோலையை கருணாநிதி அளித்தார்.

அண்ணா பல்கலை ரூ. 25 லட்சம்:

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ரூ. 25 லட்சம் நிதியுதவி நாளை அளிக்கப்படும் என பல்கலைக்கழகத்துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

வீரமணி ரூ. 2 லட்சம்:

நிவாரணப் பணிகளுக்கு மதுரை ஆதீனம் ரூ. 1 லட்சம், திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி ரூ. 2லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

திரைப்பட வர்த்தக சபை ரூ. 2 லட்சம்:

தமிழகத்தில் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.2லட்சம் வழங்குவதாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் தேவிவரப்பிரசாத ராவ்தெரிவித்துள்ளார்.

இதேபோல, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்றார்.

மீனவர்களுக்கு ஸ்டேட் பாங்க் உதவி:

இதற்கிடையே கடல் கொந்தளிப்பால் மீன் பிடி படகுகள், வலைகள் உள்ளிட்டவற்றை இழந்து நிற்கும்மீனவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக கடனுதவி வழங்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முடிவுசெய்துள்ளது.

மீனவர்கள் வைத்துள்ள பழைய கடன்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் புதிய கடனுதவியை வழங்க இந்தவங்கி முன் வந்துள்ளது.


குஜராத்தில் இருந்து நிவாரண உதவி:

இதற்கிடையே குஜராத் மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் உணவு, மருந்துகள், போர்வைகள், உடைகள்ஆகியவை இன்று தமிழகத்துக்கு வந்து சேர்ந்தன. அம் மாநில சட்ட அமைச்சர் அசோக் பட் இதனை தமிழகஅதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

மேலும் தமிழக முதல்வரிடம் குஜராத் அரசின் உதவியாக ரூ. 5 கோடிக்கான காசோலையையும் அமைச்சர்வழங்குவார்.

விஜய் ரூ. 5 லட்சம்:

இதே போல நடிகர் விஜய் தனது தங்கை வித்யாராணி அறக்கட்டளையின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 5லட்சம் வழங்கியுள்ளார். மேலும் தனது ரசிகர் மன்றத்தினர் மூலம் அரிசி, உணவும் வழங்கி வருகிறார்.

மகாராஷ்டிரா, ஒரிஸ்ஸா உதவி:

இதே போல தமிழகத்துக்கு எல்லா வகையிலும் உதவி செய்யத் தயாராக இருப்பதாக மகாராஷ்டிர முதல்வர்விலாஸ்ராவ் தேஷ்முக்கும், ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்கும் முதல்வர் ஜெயலலிதாவிடம்தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிர மக்களிடம் இருந்து உதவிப் பொருள்கள் குவிந்து வருவதாகவும் அவற்றை தமிழகத்துக்கு அனுப்பிவைப்பதாகவும் தேஷ்முக் கூறியுள்ளார்.

உடனடியாக என்னென்ன உதவி தேவைப்படுகிறது என்பதைக் கேட்ட நவீன், அவற்றை ஒரிஸ்ஸாவில் இருந்துஅனுப்பி வைப்பதாக உறுதியளித்துள்ளார்.

இந்தியாவின் உதவி:

இதற்கிடையே சென்னையில் இருந்து உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு மாலத்தீவுகளுக்கு இந்திய ராணுவவிமானங்கள் விரைந்துள்ளன. தாம்பரம் விமானப் படைத் தளத்தில் இருந்து இந்த விமானங்கள் சென்றன.

அதே போல இலங்கைக்கும் சிறப்பு விமானங்களில் மருந்துகள் கொண்டு செல்லப்படுகின்றன.

கனரா வங்கி ரூ. 2 கோடி:

கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கனரா வங்கி ரூ. 2 கோடி உதவி நிதி வழங்கியுள்ளது.

பா.ஜ.க. குழு அமைப்பு:

பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவவும், நிதி திரட்டவும் பா.ஜ.கவின் சார்பில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

யூனிசெப் பெரும் உதவி:

தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியில் ஐ.நா. சபையில்யூனிசெப் அமைப்பும் தீவிரமாக இறங்கியுள்ளது.

நாகப்பட்டிணம், கடலூர், கன்னியாகுமரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதாரமான குடிநீர், மருந்துகள் வழங்கும் பணியில்இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது. இதற்காக 50 மாபெரும் வாட்டர் டேங்கடர்களை இந்த அமைப்பு களத்தில் இறக்கியுள்ளது.

மேலும் பிணங்கள் குவிந்ததால் ஏற்பட்டுள்ள சுகாதாரக் கேட்டைத் தடுக்க 50,000 பிளீச்சிங் பெளடர் பாக்கெட்டுகளையும் இந்தஅமைப்பு வினியோகித்துள்ளது.

38,000 படுக்கைகள், 10,000 காட்டன் துணிகளையும் இந்த அமைப்பு வழங்கியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X