சோக வீட்டில் திருடும் மிருகங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டனம் & கடலூர்:

கடல் கொந்தளிப்பால் சேதமடைந்துள்ள வீடுகளிலும், கேட்பாரற்று கிடக்கும் சடலங்களிடமும் மனித நேயமற்றசிலர், நகை, பணத்தைத் திருடிச் செல்வதாகக் கூறப்படுகிறது.

People leaving from coastal area
நாகை மாவட்டத்தின் முக்கால்வாசிப்பகுதி கடல் கொந்தளிப்பினால் சேதமடைந்து, சிதிலமடைந்துகாணப்படுகிறது. பல வீடுகள் இடிந்து விட்டன. உயிர் தப்பினால் போதும் என்று பெரும்பாலானவர்கள் வீடுகளைஅப்படியே விட்டு விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறி விட்டனர்.

இந் நிலையில், கேட்பாரற்றுக் கிடக்கும் வீடுகளில் புகும் சிலர் அங்குள்ள நகைகள், பணங்கள், பிற பொருட்களைதிருடிச் செல்கின்றனர். இதேபோல, பல இடங்களில் பிணங்கள் ஆங்காங்கே கிடக்கின்றன. யாரும் வந்துஅடையாளம் காட்டாததாலும், அடையாளம் தெரியாததாலும் இந்த பிணங்கள் அப்படியே கிடக்கின்றன.

இந்த பிணங்களின் கை, காதுகளில் கிடக்கும் நகைகளையும் ஒரு கும்பல் திருடி வருகிறது. நாகை மட்டுமல்லாதுகடலூரிலும் இதே நிலைதான் என்று கூறுகிறார்கள்.

மனித நேயமற்ற மிருகங்களின் இந்த செயலை போலீஸார் தடுக்காமல் செயலிழந்து இருப்பதாக பொதுமக்கள்குமுறுகிறார்கள்.

9 பேருடன் வந்து தனியாக திரும்பிய சிறுவன்:

கடல் தாயின் கோர தாண்டவத்தில் வேளாங்கண்ணிக்கு 9 பேருடன் வந்த குடும்பத்தில் 15 வயது சிறுவன் மட்டுமேஉயிர் தப்பினான். மற்ற 8 பேரும் கடல் கொந்தளிப்புக்கு பலியாகி விட்டனர்.

பெங்களூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வேளாங்கண்ணிக்கு சாமி கும்பிட வந்திருந்தனர். 26ம் தேதி காலைஅவர்கள் மாதா கோவிலில் சாமி கும்பிட்ட பிறகு கடலோரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது வந்த சுனாமி அலையில் அங்கிருந்த பெரும்பாலானவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் மாத்யூ என்ற 15வயது சிறுவன் மட்டுமே காயத்துடன் உயிர் தப்பினார். அவனது குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரும் கடல் அலைக்குப்பலியாகி விட்டனர்.

அதிர்ச்சியும், வேதனையும் தாக்க மாதா கோவிலுக்குள் சென்று அப்படியே உட்கார்ந்து விட்டான் அந்த பரிதாபச்சிறுவன். அதன் பின்னர் நிதானத்திற்கு வந்த அவன் பெங்களூரில் உள்ள தனது உறவினர்களுக்குப் போன் செய்துநடந்ததைக் கூறி அழுதுள்ளான்.

இதையடுத்து பெங்களூரிலிருந்து உறவினர்கள் வேளாங்கண்ணிக்கு விரைந்து வந்து மாத்யூவை பெங்களூர்அழைத்துச் சென்றனர்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற