For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் பலியானோர் எண்ணிக்கை 7,800 ஆனது!!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Bodies lying in hospitalதமிழகத்தில் கடல் கொந்தளிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 7,800யை எட்டியுள்ளது.

இதில் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் தான் மிக அதிக அளவில் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. இங்கு பலியானவர்களின் எண்ணிக்கை3,500 என போலீசார் கூறுகின்றனர்.

ஆனால், 12 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போய்விட்ட நிலையில் உயிர்ச் சேதத்தின் அளவு 5,000 வரை இருக்கும்என்றே தெரிகிறது.

நாகை மாவட்டம்:

இம் மாவட்டத்தில் வேளாங்கண்ணியில் மட்டும் 500 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறினாலும் 2,000 பேர்பலியாகிவிட்டதாக இப் பகுதியினர் கூறுகின்றனர்.

நாகப்பட்டிணம் நகரில் 1,500 பேரும், வேதாரண்யத்தில் 350 பேரும், சீர்காழியில் 550 பேரும் பலியாகிவிட்டனர்.

பூம்புகார் நகரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 1,000 பேர் பலியாகியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம்:

முத்துப்பேட்டையை அடுத்த கடல் பகுதிகளில் 1,000 பேர் பலியாகியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 625 பேர் பலியாகிவிட்டனர். இதில் குளச்சல் பகுதியில் தான் மிக பயங்கரமான உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.

The scene in Cuddalore
கடலூர் மாவட்டம்:

கடலூரில் 470 பேர் பலியாகியுள்ளனர். ஆனால், 425 பேரே இறந்ததாக போலீசார் கூறுகின்றனர்.

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துவிட்டது. இதில் 280 பேர்காரைக்காலில் பலியாகியுள்ளனர்.

சென்னை:

சென்னை நகரில் கடல் கொந்தளிப்ப

ால் பலியானவர்களின் எண்ணிக்கை 200யைத் தாண்டிவிட்டது.

கல்பாக்கம்:

கல்பாக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X