Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலூரில் கரையொதுங்கிய 44 பிணங்கள்

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

The scene in cudalore

கடல் கொந்தளிப்பினால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட 44 பேரின் உடல்கள் இன்று கடலூரில் கரைஒதுங்கின. இதே போல சென்னை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலிலும் உடல்கள் கரையொதுங்கஆரம்பித்துள்ளன.

கடல் கொந்தளிப்பினால் பெரும் நாசம் ஏற்பட்டுள்ள கடலூரில் பலருடைய உடல்கள் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டு விட்டன. தற்போது அந்த உடல்கள் படிப்படியாக கரை ஒதுங்கத் தொடங்கியுள்ளன.

இன்று காலை மட்டும் 44 பிணங்கள் கரை ஒதுங்கின. கடந்த 3 நிாட்களில் மட்டும் இதுவரை 500க்கும் மேற்பட்டஉடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மேலும் பல பிணங்கள் கரை ஒதுங்கக் கூடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல சென்னையில் 14 உடல்களும் குளச்சலில் பல உடல்களும் கரையொதுங்கியுள்ளன. சென்னையில்இதுவரை 175 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 3 ஆண்களின் உடல்களும், ஸ்டான்லி மருத்துவமனையில் 8 ஆண்களின்உடல்களும் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளன.

கடலூரில் இன்று ராணுவம் முழு வீச்சில் தனது மீட்ப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இங்கு பலியானவர்களின்எண்ணிக்கை 800க்கும் அதிகம் என்று தெரிகிறது.

இம் மாவட்டத்தில் உள்ள தமிழகத்திலேயே மிகப் பெரிய மீனவர் கிராமமான தேவதானப்பட்டினத்தில் மட்டும்530 பேரி பலியாகியுள்ளனர்.

மீட்புப் பணியில் கல்லூரி மாணவர்கள்

கடலூரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்களும், பெங்களூர் உள்படபல்வேறு இடங்களில் இருந்தும் வந்துள்ள டாக்டர்கள் குழுவினரும் இரவு, பகலாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பல நூறு பேர் இந்த மாட்டத்தின் கடலோரப் பகுதிகளில் உடல்களை மீட்பது மற்றும் புதைக்கும் பணிகளில் விழுப்புரம், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த கல்லூரிமாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

போலீசாருக்கும் அரசு ஊழியர்களுக்கும் பெருமளவில் இவர்கள் உதவி செய்து வருகின்றனர்.

காயமடைந்தவர்களுக்கு பெங்களூரைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் ஓடிச் சென்று உதவி செய்கின்றனர்.

மேலும் நேரு யுவ கேந்திரா, மெடிசின்ஸ் சான்ஸ் பிரான்டியர்ஸ் சர்வதேச அமைப்பு, ராமகிருஷ்ண மடம் ஆகியவற்றைச் சேர்ந்த இளைஞர்களும் பெண்களும் மீட்புப்பணிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மாணவர்களும் அமைப்பினரும் செய்யும் உதவியை நாங்கள் மறக்கவே முடியாது என்று உணர்ச்சிவசப்பட்டு சொல்கிறார் தமிழக அரசின்உள்ளாட்சித்துறைச் செயலாளர் கரியாலி. கடலூரில் மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வரும் அவர் கூறுகையில், எங்களுக்கு மிகப் பெரிய அளவில் இந்த மாணவர்கள்கைகொடுத்து உதவி வருகின்றனர் என்றார்.

விழுப்புரம் மாணவர்களைக் கொண்டு கிராமங்களிவ் உடல்களை மீட்கும் பணிகளும் உளுந்தூர்பேட்டை அன்னை தெரசா கல்லூரி மாணவர்களைக் கொண்டுமருத்துவ உதவிப் பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.

மேலும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து என்.எஸ்.எஸ். அமைப்பு மாணவர்களும் இப் பகுதியில் குவிந்து உதவிகள் செய்து வருகின்றனர்.

கல்பாக்கத்தில் 100 பேர் பலி:

இதற்கிடையே கல்பாக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 100யைத் தாண்டியுள்ளது. இங்குள்ள மின் நிலையத்தின் காலனி மிகக் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது.

கார்கள் எல்லாம் தூக்கி வீசப்பட்டு மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

பாண்டிச்சேரியில் பலி 500:

அதே போல பாண்டிச்சேரியில் பலியானவர்கள் எண்ணிக்கை 500யைத் தாண்டிவிட்டதாக அம் மாநில அரசு தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+