உடல்களைத் தர பணம் பறிக்கும் நாய்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

Bodies lying in hospitalசுனாமி தாக்குதலில் பலியாகி சென்னை அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ள இறந்தவர்களின்உடல்களைத் தர மருத்துவமனை ஊழியர்கள் பணம் கேட்பதாக பலியானவர்களின் உறவினர்கள்குமுறுகின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல்களைத் தர மருத்துவமனை ஊழியர்கள் பணம் கேட்பதுவழக்கம் தான். இதை எத்தனை முறை சுட்டிக் காட்டினாலும் அரசும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

அரசு ஊழியர்கள் என்ற பெயரில் பிணவறைகளில் பணியாற்றும் அந்த நாய்களும் திருந்துவதில்லை.

இந் நிலையில் மகா கொடுமையான முறையில் சுனாமி தாக்குதலுக்கு ஆளாகி இறந்தவர்களின் உடல்களைத் தரவும்மருத்துவமனை ஊழியர்கள் பணம் கேட்டு வருகின்றனர்.

சென்னையில் சுனாமி தாக்குதலுக்கு ஆளாகி சுமார் 200 பேர் பலியாகியுள்ளனர் (188 பேர் என்கிறது அரசு).இவர்களில 86 பேருடைய உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன.

மற்ற உடல்கள் ஸ்டான்லி மருத்துவமனையிலும், அரசு பொது மருத்துவமனையிலும் வைக்கப்பட்டிருந்தன.

இந்த உடல்களைப் பெற்று, சுடுகாட்டுக்குச் கொண்டு செல்வதற்குள் உறவினர்கள் தவித்துப் போய் விடுகிறார்கள்.பிணவறையிலிருந்து உடலை எடுத்துக் கொண்டு வந்து தர ரூ. 300 தர வேண்டும் என்று மருத்துவமனைஊழியர்கள் கூறுகிறார்கள்.

வழக்கமாக ரூ. 500 வாங்குவோம். ஆனால் இப்போது ரூ. 200 குறைத்துக் கொண்டு வாங்குகிறோம் என்றுகாரணம் வேறு கூறுகிறார்கள் அந்த மானிட மிருகங்கள்.

உடலை வாங்கிக் கொண்டு வெளியே வந்தால், சுடுகாட்டுக்கு எடுத்துப் போக வேன்காரர்கள் ரூ. 500கேட்கிறார்கள். அதுவும் குறுகிய தூரமாக இருந்தால்தான், அதிக தூரத்திற்கு உடலை எடுத்துப் போக வேண்டும்என்றால் ரூ. 1000 வரை அவர்கள் கேட்கிறார்கள்.

இறந்த கொடுமை தாங்க முடியால், வீட்டையும் உடமைகளையும் இழந்துவிட்ட மக்கள் உடல்களை இடுகாட்டுக்கொண்டு போக ரூ. 2,000 வரை செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்தப் பணத்தை தயார் செய்ய இவர்கள் படும்பாடு சொல்லி மாளாது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற