For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுனாமி: திரையுலகம் உணவு, உடை சேகரிப்பு

By Staff
Google Oneindia Tamil News
The Scene in Coastal area

சுனாமியால் தாக்கப்பட்டவர்களுக்கு உதவ முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ. 21 லட்சம் வழங்குவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே சுனாமி தாக்குதலுக்கு ஆளான தமிழக மக்களுக்கு உதவுவதற்காக தமிழ் திரையுலகினர் இன்று (வியாழக்கிழமை) சென்னைநகர வீதிகளில் உடைகள், உணவு, நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இயக்குனர்கள், நடிகர்கள், நடிகையர், தயாப்பாரிளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு இன்று இயக்குனர் பாரதிராஜா தலைமையில்சென்னையில் இந்த சமூகப் பணியில் இறங்கினர்.

இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.கே.செல்வமணி, பாலா, நடிகர்கள் ரமேஷ் கண்ணா, ஜெயம் ரவி, நடிகைகள் ரேவதி, ரோகிணிஉள்ளிட்டோர் அடங்கிய குழு அண்ணா சாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்க சபை முன்பிருந்து ஊர்வலமாகக் கிளம்பிவர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகளில் நிவாரணப் பொருட்களை சேகரித்தனர்.

நிதி, உணவு, உடை என பல்வேறு பொருட்களையும் அவர்கள் சேகரித்தனர். பொது மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அவர்களிடம் நிவாரணப்பொருட்களை வழங்கினர்.

கமல் ரூ. 21 லட்சம்:

இதற்கிடையே கடல் கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 21 லட்சம்வழங்குவதாக கமல் அறிவித்துள்ளார்.

மும்பையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், சுனாமி அலைகளின் அரக்கத்தனம் ஆயிரக்கணக்கான குழந்தைகளையும்,பெரியவர்களையும் அடித்துச் சென்று விட்டது. இந்தக் காட்சிகளை தொலைக்காட்சிகளிலும், நாளிதழ்களிலும் வந்த படங்களைக் கண்டுமனம் துடித்துப் போய் விட்டேன். நெஞ்சம் பதறுகிறது.

வீடு, வாசல், உடமைகளை இழந்து பரிதவிக்கும் மக்களுக்கு உதவுவதற்காக தலமைச்சர் பொது நவாரண நதிக்கு ரூ. 21 லட்சம்வழங்குகிறேன். தற்போது மும்பையில் உள்ளேன். சென்னை திரும்பியதும் தல்வரைச் சந்தித்து காசோலையை வழங்குவேன் என்றார்.

இதேபோல நடிகர் ரஜினிகாந்த்தும் ரூ. 21 லட்சம் வழங்குவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X