மாட்டு பாஸ்கரின் எண்கெளண்டர் பயம்
காஞ்சிபுரம்:
என்னை என்கெளண்டர் மூலம் போலீஸார் சுட்டுக் கொல்ல திட்டமிட்டுள்ளனர் என சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள மாட்டுபாஸ்கர் நீதிபதியிடம் புகார் தெரிவித்துள்ளான்.
சங்கரராமனைக் கொன்ற கூலிப் படையைச் சேர்ந்த பாஸ்கர் என்ற மாட்டு பாஸ்கர், குருவி ரவி, பழனி உள்ளிட்ட 8 பேரின் சிறைக் காவல்முடிவடைந்ததால் அனைவரும் காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்கள் அனைவரின் காவலையும் ஜனவரி 12ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தமராஜன் உத்தரவிட்டார். அப்போது பாஸ்கர் சார்பில்நீதிபதியிடம் ஒரு மனு வழங்கப்பட்டது.
அந்த மனு குறித்து பாஸ்கரின் வழக்கறிஞர் டார்வின் விஸ்டம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பாஸ்கர் என்ற இயற்பெயரை போலீஸாரே மாட்டு பாஸ்கர் என்று மாற்றி வைத்துள்ளனர். அந்தப் பெயர்தான் உனக்கு நிலைக்க வேண்டும்.அப்போதுதான் பின்னர் சமயம் கிடைக்கும்போது என்கெளண்டர் செய்யும்போது சரியாக, பொருத்தமாக இருக்கும் என்று போலீஸார்மிரட்டியுள்ளனர்.
அத்தோடு, போலீஸ் விசாரணையின்போதும், சிறையிலும் பாஸ்கர் கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார். இவை அனைத்தையும் தனதுமனுவில் பாஸ்கர் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார் என்றார் விஸ்டம்.












Click it and Unblock the Notifications