உயிர்களைக் காத்த தொலைபேசி அழைப்பு!
பாண்டிச்சேரி:
சாதாரண ஒரு தொலைபேசி அழைப்பினால் கன்னியாகுமரியில் நூற்றுக்கணக்கான உயிர்கள் சுனாமிக்குப் பலியாகாமல் தப்பியுள்ளன.
![]() |
பாண்டிச்சேரி நல்லநாடு கிராமத்தில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் கிராம தகவல் தொடர்பு ஆராய்ச்சித் திட்டத்தில்பயிற்சி பெற்றவர் விஜய்குமார். இவர் இப்போது சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார்.
இந்த மையம் அப் பகுதியில் 3 கிராமங்களைத் தத்தெடுத்துள்ளது. மேலும் இந்த மூன்று கிராமங்களிலும் தகவல் ஒலிபரப்புக்கு உதவஆங்காங்கே மைக்குகளையும் அமைத்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சுனாமி அலைகளின் தாக்குதல் குறித்து அறிந்தவுடன் சிங்கப்பூரில் இருந்து உடனே தனது கிராமத்தைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார் விஜய்குமார். இதையடுத்து துரிதமாக செயல்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் தகவல் தொடர்பு ஆராய்ச்சிமையத்தினர் மைக்குகள் மூலம் சுனாமி தாக்குதல் குறித்து 3 கிராமத்தினரையும் எச்சரித்தனர்.
இதையடுத்து மக்கள் அனைவரும் கடலோரங்களை விட்டு ஓடினர். மேடான பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். அடுத்த சில நிமிடங்களில்பாய்ந்த சுனாமி அலைகள் கிராமங்களின் கரையோர வீடுகளை விழுங்கிவிட்டுச் சென்றன.
விஜய்குமாரின் துரிதமான செயலாலும் சுவாமிநாதன் அறக்கட்டளையின் மாதிரி கிராமத் திட்டத்தாலும் இங்கு நூற்றுக்கணக்கான உயிர்கள்காப்பாற்றப்பட்டுள்ளன.













Click it and Unblock the Notifications