For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லியண்டர் பயஸ் 4.3 லட்சம் டாலர் நிதியுதவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Vivek oberai visits affected area

சென்னை ஓபன் டென்னிஸில் விளையாடுவதால் கிடைக்கும் 4,3 லட்சம் அமெரிக்க டாலரை கடல் கொந்தளிப்பால்பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்போவதாக லியாண்டர் பயஸ் அறிவித்துள்ளார்.

சென்னை ஓபன் டென்னிஸ் இன்று தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள சென்னை வந்துள்ள பயஸ் நிருபர்களிடம் பேசுகையில், நான்எப்போதும் சிறுவர்களுக்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் உதவி வருகிறேன்.

இம்முறை சென்னை ஓபன் டென்னிஸில் விளையாடுவதால் கிடைக்கும் பணம் அனைத்தையும் சுனாமி அலையால்பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகிறேன். இயற்கைக்கு எதிராக நாம் போராட முடியாது என்றார்.

கிராமங்களை தத்தெடுக்கும் சட்டீஸ்கார்:

இதற்கிடையே சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழக கடலோர மக்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள அரிசி மூட்டைகளை சட்டீஸ்கார் அரசுஅனுப்பியுள்ளது. மேலும் 2 கிராமங்களைத் தத்தெடுக்கவும் அந்த அரசு முன்வந்துள்ளது. அதேபோல் அரியானாவில் இருந்து 173லாரிகளில் நிவாரணப் பொருட்கள் சென்னை வந்துள்ளன.

காஷ்மீர் போலீஸார் நிதி:

இதற்கிடையே கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய காஷ்மீர் மாநில போலீசார் ரூ.3.22 லட்சம் நிதியுதவிஅளித்தனர். அதேபோல காஷ்மீர் மாநில டெலிகாம் பிரிவு போலீஸார் ரூ.1 லட்சம் நிதியளித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் ரூ.25 லட்சம்:

இந் நிலையில் தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.25 லட்சத்துக்கு நிவாரண பொருட்கள் அந்தந்த மாவட்ட காங்கிரஸ் மூலம் வழங்கப்படும் என்றுஅக் கட்சியின் மாநிலத் தலைவர் வாசன் தெரிவித்தார்.

தொழிலதிபர் ஸ்வராஜ் பால் ரூ 1 கோடி:

இதற்கிடையே லண்டனில் வசிக்கும் இந்தியத் தொழிலதிபர் ஸ்வராஜ் பால் ரூ.1 கோடி நிதியை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்குத்தருவதாக அறிவித்துள்ளார். முதல் தவணையாக ரூ.50 லட்சத்தை அனுப்பியுள்ளார். மேலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழக கிராமம்ஒன்றைத் தத்தெடுக்க விரும்புவதாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தைவான் ரூ 215 கோடி:

அதேபோல கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ரூ.215 கோடி நிதி திரட்டிக் கொடுப்பதாக தைவான் அரசு தெரிவித்துள்ளது.மேலும் 2,000 டன் அரிசியை அனுப்புவும் முடிவெடுத்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் ரூ.5 லட்சம்:

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அக் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏ.பி. பர்தன், குருதாஸ் தாஸ்குப்தா, ராஜா ஆகியோர் பிரதமரைச்சந்தித்து ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்தனர். மேலும் அனைந்திந்திய வர்த்தக யூனியன் காங்கிரஸ் மற்றும் அனைத்திந்திய வங்கி ஊழியர்கள்சங்கத்தின் சார்பில் ரூ.43.65 லட்சம் முதல் தவணையாக பிரதமர் நிவாரண நிதிக்குத் தரப்பட்டது.

பெல் நிறுவனம் ரூ 2.6 கோடி:

இந் நிலையில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.2.6 கோடியை பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. ஊழியர்கள் சார்பில் ரூ.60லட்சமும், நிறுவனத்தின் சார்பில் ரூ.2 கோடியும் தரப்பட்டுள்ளது.

சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாடு:

இந் நிலையில் ஜெனீவாவில் சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாடு வரும் 11ம் தேதி நடைபெறுகிறது. ஐ.நா. சபை ஆதரவுடன் இந்தமாநாடு நடைபெறுகிறது.

ஸ்டேட் பாங்க் கடனுதவி:

இந் நிலையில் அந்தமானில் வாழும் மக்களுக்கு புதிய விவசாய மற்றும் இதர கடன்களை அளிக்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாமுன்வந்துள்ளது. இதற்கு முன் கடன் வாங்கியிருந்தால், எந்தப் பொருட்களின் பேரில் கடன் வாங்யிருந்தார்களோ அந்தப் பொருட்கள் கடல்கொந்தளிப்பில் சேதமடைந்திருந்தால், அந்தக் கடனை தள்ளுபடி செய்வதாகவும் எஸ்.பி.ஐ. அறிவித்துள்ளது.

யூ.சி.ஓ. வங்கி ரூ.1 கோடி:

இந் நிலையில் பிரதமரின் நிவாரண நிதிக்கு யூ.சி.ஓ. வங்கி ரூ.1 கோடி வழங்கியுள்ளது. வங்கி ஊழியர்களின் ஒரு நாள் ஊதியத்தைவழங்கியதன் மூலம் இந்தத் தொகை ஈட்டப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X