நாகப்பட்டிணத்தில் தோண்டத் தோண்ட பிணங்கள்
நாகப்பட்டிணம்:
![]() |
சுனாமி தாக்கி 1 வாரம் முடிந்த நிலையில் நாகப்பட்டிணம், நாகூர் பகுதிகளில் இன்னும் உடல்கள் கிடைத்தவண்ணம் உள்ளன.
புல்டோசர்கள் மூலம் இடிபாடுகளை அகற்றியபோது பல இடங்களில் அழுகிய நிலையில் உடல்களும் சேர்ந்து வந்தன.
இதனால் நாகையில் பலியானவர்களின் எண்ணிக்கை 8,500த்தை விட மிக மிக அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.
சுனாமி அலைகள் தாக்கி 7,793 பேர் பலியானதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5,800 பேரும்,கன்னியாகுமரி மாவட்டத்தில் 810 பேரும், கடலூர் மாவட்டத்தில் 600 பேரும் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 8,600க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ராணுவத்தினர், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் முழு வீச்சில்ஈடுபட்டு வருகின்றன.
பள்ளி, கல்லூரி, வங்கி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு மற்றும் அத்தியாவசியப்பொருட்களை வினியோகித்து வருகின்றனர்.
குவிந்த அமைச்சர்கள்:
நாகப்பட்டினத்தில் மீட்பு பணிகள் சரிவர நடக்கவில்லை என்று புகார் வந்ததைத் தொடர்ந்து, அங்கு அமைச்சர்கள் மற்றும்ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், பாண்டுரங்கன், வைத்திலிங்கம், இன்பத்தமிழன், வேலுச்சாமி, அன்பழகன், வாரியத் தலைவர்கள்பரஞ்சோதி, ரவீந்திரன், சிந்து ரவிச்சந்திரன் என ஒவ்வொருவர் தலைமையிலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்களில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் சாந்தா ஷீலா நாயர் தலைமையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 10 பேர் நாகப்பட்டினத்தில் மீட்புப் பணிகளைமேற்பார்வையிடுகின்றனர்.
கடற்படை மருத்துவ முகாம்கள்:
இதற்கிடையே நாகை வந்துள்ள இந்திய கப்பல்படையின் ரஞ்சித் கப்பல் கமாண்டன்ட் சுரேந்திர அகுஜா நிருபர்களிடம் பேசுகையில்,
நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரை காப்பாற்றுவதற்காக இந்திய கப்பல் படையைச் சேர்ந்த ரஞ்சித், கஞ்சர் ஆகிய கப்பல்கள் நாகைகடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. கப்பல்படை டாக்டர்கள் மூலம் வேளாங்கண்ணி கோயில், நீலாதாட்சியம்மன் கோயில், நாகூர் ஆகியஇடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உயிருக்கு போராடுவோரை ஹெலிகாப்டர் மூலம் கப்பலுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
காலியான மருத்துவ முகாம்கள்:
இந் நிலையில் நாகை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 84 அரசு மருத்துவ முகாம்களில் ஒரு சில முகாம்களைத் தவிர மற்ற முகாம்களில்பொதுமக்கள் யாருமில்லாமல் மருத்துவர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலைதான் உள்ளது.
நாகூர், அக்கரைப்பேட்டை, சில்லடி முகாம்களுக்கு மட்டுமே பொதுமக்கள் வந்தனர். மற்ற முகாம்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.













Click it and Unblock the Notifications