சுனாமி: பொங்கலுக்குள் 50,000 தற்காலிக வீடுகள்
சென்னை:
![]() |
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொங்கல் தினத்திற்குள் 50,000 தற்காலிக வீடுகள் கட்டித் தரப்படும் என்று தமிழக அரசின்வருவாய் நிர்வாக ஆணையர் சந்தானம் தெரிவித்துள்ளார்.
கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக வீடு கட்டித்தரும் பணி தற்போது நடந்து வருகிறது. நாகப்பட்டினம்மாவட்டத்தில் 18,000 வீடுகள், சென்னையில் 5,500 வீடுகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் 8,645 வீடுகள், கடலூர்மாவட்டத்தில் 5,000 வீடுகள், விழுப்புரம் மாவட்டத்தில் 4,750 வீடுகள்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4,750 வீடுகள், தூத்துக்குடி மாவட்டத்தில் 400 வீடுகள், திருவள்ளுர் மாவட்டத்தில் 2,500 வீடுகள்,திருநெல்வேலியில் 350 வீடுகள், தஞ்சை மாவட்டத்தில் 50 வீடுகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 வீடுகள் உள்பட 50 ஆயிரம்தற்காலிக வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சந்தானம் நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்காலிக வீடுகள் கட்டும் பணி பொங்கல் பண்டிகைக்குள் முடிவடையும். இந்த வீடுகள் தனியார் தொண்டு நிறுவனத்தின்உதவியுடன் கட்டப்படுகிறது.
நிரந்தர வீடுகள் கடலில் இருந்து வெகு தொலைவில் அமையதவாறு அவற்றுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
ரூ.600 கோடி செலவில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 1 லட்சம் நிரந்தர வீடுகள் கட்டும் பணி விரைவில் தொடங்கும்.
தமிழகம் முழுவதும் 150 தனியார் தொண்டு நிறுவனங்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. இதில் நாகப்பட்டினம்மாவட்டத்தில் மட்டும் 75 தொண்டு நிறுவனங்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றன என்று கூறினார்.
நாளை பள்ளிகள் திறப்பு:
இதற்கிடையே கடல் கொந்தளிப்பால் மோசமாக பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை முதல் பள்ளிகள்வழக்கம்போல் இயங்கும் என்று மாவட்ட கல்வி அதிகாரி ஆரோக்கியசாமி தெரிவித்துள்ளார்.
ஆற்காட்டுத்துரையில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் கடல் நீரில் அடித்துச்செல்லப்பட்டு விட்டதால் இங்கு மட்டும் பள்ளி தொடங்க மேலும் சில காலம் பிடிக்கும் என்றும், மற்ற பள்ளிகளில் நாளை முதல்வகுப்புகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.













Click it and Unblock the Notifications