சங்கராச்சாரியார் ஜாமீனில் விடுதலை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி:
சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.
இந்தக் கொலை வழக்கில் தீபாவளி இரவன்று (கடந்த நவம்பர் 11ம் தேதி) ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில்அடைக்கப்பட்டார்.
இதில் ஜாமீன் கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி லஹோத்தி, நீதிபதி மாத்தூர், நீதிபதி நோலேகர் ஆகியோர்விசாரித்து இன்று தீர்ப்பை வழங்கினர்.
தீர்ப்பின் விவரம்:
ஜெயேந்திரருக்கு எதிராக வழக்கு உறுதியாக இருந்தாலும், அவருக்கு ஜாமீன் தர இயலும் என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம்.
சொந்த ஜாமீனிலும், மேலும் இரு தனி நபர் ஜாமீனிலும் சங்கராச்சாரியார் விடுவிக்கப்படுகிறார். ஜாமீன் பத்திரங்களை காஞ்சிபுரம்நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் சமர்பிக்க வேண்டும்.
இந்தக் கொலை வழக்கில் விசாரணையை முடித்து போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யும் வரை சங்கர மடத்துக்கு ஜெயேந்திரர்போகக் கூடாது.
தனது பாஸ்போர்ட்டை போலீசாரிடம் ஜெயேந்திரர் ஒப்படைக்க வேண்டும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.விசாரணைக்காக போலீசார் கூப்பிடும்போதெல்லாம் அவர்கள் முன் ஆஜராக வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.
இந்தத் தீர்ப்பையொட்டி ஏராளமான பொது மக்களும், வழக்கறிஞர்களும், செய்தியாளர்களும் நீதிமன்ற ஹாலுக்குள் குவிந்திருந்தனர்.
இந்த ஜாமீன் மனு மீது விசாரணை நடந்தபோது அரசு வழக்கறிஞர் துல்சியிடம், கொலையில் ஜெயேந்திரருக்கு தொடர்பு இருப்பதற்கானநேரடி ஆதாரங்கள், சாட்சிகளை ஒப்படைக்குமாறு திரும்பத் திரும்பக் கேட்டனர். ஆனால், அவற்றை வழங்க முடியாமல் துல்சி திணறினார்.
மேலும் சங்கர மடத்தின் வங்கிக் கணக்குகள் விஷயத்தில் போலீசார் மாற்றி, மாற்றிப் பேசியதை ஜெயேந்திரரின் வழக்கறிஞர் நரிமன்தெளிவாக முன் எடுத்து வைத்து வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களும் முடிந்த கடந்த 7ம் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிபதிகள் இன்று காலை ஜெயேந்திரரை ஜாமீனில் விடுவித்துதீர்ப்பளித்தனர்.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் ஜெயேந்திரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே ஜாமீன் வழங்கிவிட்டது.இதனால் ஜெயேந்திரர் சிறையில் இருந்து வெளியே வர சிக்கல் ஏதும் இல்லை.
ஜெயேந்திரருக்கு எதிராக வழக்கு உறுதியாக இருந்தாலும், அவருக்கு ஜாமீன் தர இயலும் என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம்.
எனவே, விசாரணை நீதிமன்றத்தின் திருப்திக்கேற்ப இரு நிபர் உத்தரவாதம் வழங்கிய பின்னர் மனுதாரரை சிறையிலிருந்து விடுவிக்கலாம்என்று உத்தரவிடப்படுகிறது.
இந்த வழக்கில் ழு விசாரணை டியும் வரையும்,அதேபோல, குற்றப்பத்திக்கை தாக்கல் செய்யப்படும் வரையிலும் மனுதாரர் காஞ்சிபுரம்சங்கர மடத்திற்குச் செல்லக் கூடாது என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெவித்திருந்தனர்.
ஏற்கனவே ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கில் ஜெயேந்திரருக்கு ஜாமீன் கிடைத்துள்ளதால் அவர் சிறையிலிருந்து விடுதலையாகிறார்.
எப்போது வெளியாவார்?
இதற்கிடையே உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு தொலைநகலாக (பேக்ஸ்) அனுப்பப்பட்டுள்ளதுஎன்றும், அதனைப் பெறுவதற்கும், ஜெயேந்திரருக்கு விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றவும் வழக்கறிஞர் சண்முகம் செங்கல்பட்டுசென்றுள்ளார் என்று காஞ்சி மட வழக்கறிஞர் தியாகராஜன் தெரிவித்தார்.
எனவே இந்த நடைமுறைகள் எல்லாம் முடிந்து, இன்று மாலை அல்லது நாளை காலை ஜெயேந்திரர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications