குற்றவாளிகளான எம்எல்ஏவின் சகோதரர்கள்
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பாமக எம்.எல்.ஏ. வேல்முருகனின் இரண்டு சகோதரர்களை கடலூர் 3வது குற்றவியல் நீதிமன்றம்,தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம்கொலை செய்யப்பட்டார். பாமகவில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் அதிமுகவில் சேர்ந்தவர் இவர்.
இவரது கொலைக்கு பண்ருட்டி பாமக எம்.எல்.ஏ. வேல்முருகன், அவரது சகோதரர்கள் திருமாவளவன், கண்ணன் ஆகியோர்தான்காரணம் என்று கூறி இவர்கள் மீது வெங்கடேசனின் மனைவி சரஸ்வதி குள்ளஞ்சாவடி போலீஸில் புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்த வேல்முருகன் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தவழக்கில் கைதாகாமல் இருப்பதற்காக வேல்முருகன் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் முன் ஜாமீன் பெற்றார். மற்ற இருவரும்தலைமறைவாக உள்ளனர்.
இந் நிலையில் திருமாவளவன், கண்ணன் ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகளாக கடலூர் 3வது குற்றவியல் நீதிமன்றம்அறிவித்தது. இதுகுறித்து நீதிபதி இளவரசன் விடுத்த உத்தரவில், பிப்ரவரி 15ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் இருவரும் சரணடையவேண்டும். இல்லாவிட்டால் அவர்களது சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று கூறினார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications