கடலூர், நாகையில் உலக வங்கி குழு ஆய்வு
கடலூர்:
![]() |
சுனாமி பாதித்த கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியைச் சேர்ந்த குழுக்கள் இன்றுபார்வையிட்டு ஆய்வு செய்தன.
இந்தியாவுக்கான உலக வங்கி இயக்குநர் மைக்கேல் கார்ட்டர், ஆசிய வளர்ச்சி வங்கிக்கான இந்திய இயக்குநர் லூயிஸ் டி ஜோங்க்ஆகியோர் கொண்ட குழு இன்று கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தது.
இந்தக் குழுவினர் கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களுடன் மாவட்டஆட்சித் தலைவர் ககந்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
தங்களது வருகை குறித்து லூயிஸ் டி ஜோங்க் கூறுகையில், சுனாமியால் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு இங்கு நீண்ட காலநிவாரணத்திற்கு என்ன செய்யலாம் என்பதை அறிவதற்காக வந்துள்ளோம்.
கடலோரப் பாதுகாப்பு, தற்போதுள்ள அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்து பாதுகாப்பான வாழ்க்கைக்கு உத்தரவாதம் ஏற்படுத்துவதுஆகியவை எங்களது முக்கிய குறிக்கோள்களாகும் என்றார்.
மைக்கேல் கார்ட்டர் கூறுகையில், தேவைக்கேற்ற நிவாரண உதவிகளை உலக வங்கி நிச்சயம் வழங்கும். அவசரக கால சீரமைப்புக்கென்றுஉலக வங்கியில் சில திட்டங்கள் உள்ளன. வழக்கமாக இந்த திட்டங்கள் 2 முதல் 4 மாதங்களுக்குள் முடிக்கப்படும். இருப்பினும் தற்போதுள்ளசூழ்நிலையில் இவற்றை துரிதப்படுத்தி முடிக்க வேண்டியுள்ளது.
அடுத்த சில வாரங்களில் இந்தத் திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். மத்திய அரசு மற்றும் தமிழக அரசுடன் இணைந்துஇந்த நிவாரணத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.
கடலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட இக்குழுவினர் பின்னர் நாகை மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்று சுனாமியால் பாதித்தகிராமங்களைப் பார்வையிட்டு வருகின்றனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!













Click it and Unblock the Notifications