பெங்களூர் விசாரணைக்கு தடை: ஜெவின் மனு தள்ளுபடி
டெல்லி:
வருமானத்தை மீறி சொத்து சேர்த்த வழக்கின் விசாரணையை பெங்களூருக்கு மாற்றியதை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்தமனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
கடந்த ஆட்சியில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் வருமானத்தை மீறி ரூ. 65 கோடி சொத்து சேர்த்ததாக அடுத்து ஆட்சிக்கு வந்த திமுகவழக்குத் தொடர்ந்தது. தனி நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த விசாரணைகள் கேலிக் கூத்தான வகையில் நடந்தன.
இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில்மனு செய்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் 2003ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, வழக்குவிசாரணையை பெங்களூருக்கு மாற்றியது.
இதையடுத்து பெங்களூரில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, வழக்கின் ஆவணங்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம்செய்யப்பட்டு வருகின்றன.
இதை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் காவிரி, வீரப்பன் விவகாரத்தால் தனக்கு கர்நாடகத்தில்பாதுகாப்பு இருக்காது என்றும், இந்தப் பிரச்சனைகளால் இரு மாநில உறவுகளும் சீராக இல்லாததால், விசாரணையும் நேர்மையாகநடக்காது என்றும் கூறியிருந்தார்.
இதனால் பெங்களூர் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியிருந்தார்.
இந்த மனுவை இன்று தங்களது சேம்பரிலேயே விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், ஜெயலலிதாவின் மனுவை தள்ளுபடி செய்தனர்.இந்த மனு மீதான வழக்கறிஞர்கள் விவாதத்துக்கும் நீதிபதிகள் அனுமதி மறுத்துவிட்டனர்.
ஏற்கனவே இந்த வழக்கை பெங்களூருக்குப் பதிலாக பாண்டிச்சேரிக்கு மாற்றக் கேரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது நினைவுகூறத்தக்கது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications