ஜெ- பவார் 3வது முறை சந்திப்பு: சுனாமியோடு அரசியலும்..
சென்னை:
![]() |
முதல்வர் ஜெயலலிதாவை மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார் இன்று மூன்றாவது முறையாக மீண்டும் சந்தித்துப் பேசினார்.சுனாமி நிவாரணப் பணிகள் தவிர இருவரும் அரசியல் ஆலோசனைகளிலும் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் அன்மையில் நடந்த சுனாமி தாக்குதலைத் தொடர்ந்து நிவாரண உதவிகளை வழங்க முதல்வர் ஜெயலலிதாவுடன் சரத்பவார்ஏற்கனவே இரண்டு முறை ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றுள்ளார்.
முதல் சந்திப்பில் நிவாரணப் பணிகள் குறித்து மட்டுமே இருவரும் பேசினாலும் இரண்டாவது சந்திப்பின்போது காஞ்சி விவகாரம் மற்றும்தேசிய அளவிலான அரசியல் குறித்தும் பேசினர். வேறு வழியில்லாமல் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் பவார் மூன்றாவது அணிஅமைப்பதிலும் இன்னொரு பக்கம் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந் நிலையில் இன்று மூன்றாவது முறையாக தமிழகம் வந்தார் பவார். அந்தமானில் இருந்து வந்த அவர் சென்னை விமான நிலையத்தில்நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
அந்தமானில் அறிக்கையில் கூறப்பட்டிருந்ததை விட அதிகமான பேரழிவு ஏற்பட்டுள்ளது. அங்கு முக்கிய தொழில்களான சுற்றுலா,மீன்பிடித்தல் மற்றும் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மீண்டும் சுனாமி அலைகள் தாக்காது என்று நிலவியல்ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று கூறினார்.
பின்னர் ஜெயலலிதாவின் வீட்டிற்கு பவார் சென்றார். தமிழக, தேசிய அரசியல் விவகாரம் குறித்து இருவரும் பேச்சு நடத்தினர். இதைத்தொடர்ந்து சரத்பவாருக்கு ஜெயலலிதா மதிய விருந்து அளித்தார்.
கடந்த முறை பவார் கொடுத்த ஆலோசனையின்படி தான் காஞ்சி விவகாரம் குறித்து ஜெயலலிதா ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டார்.அதில் கிரிமினல் வழக்கில் முதல்வர் பெரிய அளவில் தலையிட முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடக்கத்தது. இந்த பாயிண்ட்டைபெரிதுபடுத்தி அறிக்கை விடச் சொன்னதே பவார் என்று கூறப்படுகிறது.
ஆனால், இருவரும் நிவாரணப் பணிகள் குறித்துப் பேசியதாகவே அரசுத் தரப்பில் தகவல் தரப்படுகிறது.
இந்த இருவரின் சந்திப்பையும் சந்தேகத்துடனேயே பார்த்து வருகிறது அறிவாலய வட்டாரம், அதே போல இச் சந்திப்பை டெல்லிகாங்கிரஸ் தலைமையும் ரசிக்கவில்லை.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!













Click it and Unblock the Notifications