ஜெயேந்திரரை மாட்டிவிட்டது தேவே கெளடா?!
கலவை:
ஜெயேந்திரர் மீது கொலை வழக்குப் பாய்ந்ததற்கு மாஜி பிரதமர் தேவே கெளடாவும் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
சென்னையை அடுத்த ஏனாத்தூரில் சங்கரா மருத்துவக் கல்லூரிக்கு நோ-அப்ஜெக்ஷன் சான்றிதழ் வழங்க தமிழக அரசு இழுத்தடித்தபோதுஅது குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் ஜெயேந்திரர் பேசியுள்ளார்.
ஆனாலும் அந்தச் சான்றிதழ் கிடைக்காமல் போகவே உச்ச நீதிமன்றத்தை அணுகி சான்றிதழ் பெற்றது காஞ்சி மடம்.
இது குறித்து, தன்னைச் சந்தித்த தேவே கெளடாவிடம் சொல்லிப் புலம்பியுள்ளார் ஜெயேந்திரர். ஜெயலலிதாவுக்கு நன்றி விசுவாசமேஇல்லை, இதனால் கர்நாடகத்தில் நடக்கப் போகும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தீவிரமாக நடத்தி அவருக்கு தண்டனைவாங்கித் தருமாறு கூறியுள்ளார் ஜெயேந்திரர்.
அப்போது தான் நன்றி என்றால் என்ன என்று ஜெயலலிதாவைப் போன்றவர்களுக்குத் தெரிய வரும் என்று ஜெயேந்திரர் கூற, இதை தனதுமகன் மூலமாக அப்படியே ஜெயலலிதாவுக்கு பாஸ் செய்திருக்கிறார் கெளடா.
(கர்நாடகத்தில் சொத்துக் குவிப்பு வழக்குக்கு முட்டுக் கட்டைகள் போட கெளடா மூலமாக ஜெயலலிதா முயல்வதை நாம் 2 மாதங்களுக்குமுன்பே சுட்டிக் காட்டியிருந்தோம்)
இதையடுத்து ஜெயேந்திரருக்கு பாடம் புகட்ட ஜெயலலிதா தருணம் பார்த்திருந்தார் என்றும், சங்கரராமன் கொலை வழக்கை வைத்துபோலீஸ் அவர் மீது பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
தன்னைச் சந்தித்த மிக முக்கிய அரசியல் பிரமுகரிடம் சங்கராச்சாரியாரே இந்தத் தகவலை எடுத்துச் சொன்னபோது அவரும் சேர்ந்துஅதிர்ந்துள்ளார்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications