அக்ரஹாரத்தில் மசூதி: அனுமதி கோரி வழக்கு
மதுரை:
அக்ரஹாரப் பகுதியில் மசூதி கட்டுவதற்கு போலீஸார் தடையாக உள்ளதாகக் கூறி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குதொடரப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜாகீர் ஹூசேன் என்பவர் மதுரை நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ராமநாதபுரம் அக்ரஹாரம் பகுதியில் 54 முஸ்லீம் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இதன் சுற்றுப் பகுதியில் தொழுகை நடத்தமசூதியே கிடையாது. 2 கிமீ தூரம் சென்றுதான் தொழுகை நடத்த வேண்டியுள்ளது.
இதையடுத்து நானும் எனது சகோதரர் குத்புதீன், கீழக்கரையைச் சேர்ந்த கலீல் அகமது ஆகியோர் சேர்ந்து புது அக்ரஹாரம் பகுதியில் மசூதிகட்ட நிலம் வாங்கினோம். மசூதி கட்ட அனுமதி கோரி ராமநாதபுரம் நகராட்சித் தலைவருக்கு விண்ணப்பித்தோம்.
எங்களது மனுவை அவர் ராமநாதபுரம் ஆட்சித் தலைவருக்கு அனுப்பினார். ஆட்சியர் உத்தரவுப்படி ஆர்.டி.ஓ விசாரணை நடத்தினார்.மசூதி கட்டத் தடையில்லை என்று பரிந்துரைத்தும், இதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கலாம் என்று கூறியும் கலெக்டருக்கு கடந்தஆண்டு செப்டம்பர் 2ம் தேதி ஆர்.டி.ஓ.கடிதம் அனுப்பினார்.
இதற்குப் பிறகும் எங்களுக்கு ஆட்சித் தலைவர் அனுமதி தரவில்லை. போலீஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதால் அனுமதிவழங்கப்படாமல் உள்ளதாகத் தெரிகிறது.
மசூதி கட்ட அனுமதிக்கக் கோரி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி ரவிராஜப் பாண்டியன், 4 வாரங்களுக்குள் இதுதொடர்பாக முடிவெடுக்குமாறு ஆட்சித் தலைவருக்குஉத்தரவிட்டார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications