ஜெயலலிதாவுக்கு டி.ஆர்.பாலு நன்றி!
சென்னை:
சென்னை கத்திப்பாரா சந்திப்பில் புதிய மேம்பாலம் கட்டுவதற்குத் தேவைப்பட்ட இடத்தை தமிழக அரசு உடனடியாக ஒதுக்கிக்கொடுத்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுநன்றி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர்.பாலு, சென்னையில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காகதொலைநோக்குடன் கூடிய திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இதன்படி தாம்பரம்- மதுரவாயல்-மாதவரம் தேசிய நெடுஞ்சாலை 4 வழிப்பாதையாக மாற்றப்படும்.
இதில் மாதவரம், மதுரவாயல் ஆகிய இடங்களில் அடுக்கு மேம்பாலங்கள் கட்டப்படவுள்ளன. அடையாறு, கூவம் ஆறு, போரூர் ஏரிஆகியவற்றின் மீது தலா ஒரு பாலம் அமைக்கப்படும்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோயம்பேடு, திரிசூலம், பாடி ஆகிய இடங்களிளிலும் அடுக்கு மேம்பாலங்கள் கட்டப்படவுள்ளன. இந்தப்பாலங்கள் அனைத்தும் ரூ. 480 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ளன.
நாளை மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடைமுபெறவுள்ள அடிக்கல் நாட்டு விழாக்களில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
மார்ச் 1ம் தேதி முதல் மேம்பால கட்டுமானப் பணிகள் தொடங்கும். இந்த வேலைகளின்போது கத்திப்பாரா சந்திப்பில் உள்ள நேரு சிலைமற்றும் கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலை ஆகியவை அகற்றப்பட மாட்டாது. போக்குவரத்திற்கும் எந்த பாதிப்பும் வராத வகையில்பார்த்துக் கொள்ளப்படும்.
சர்வதேச தரத்துடன், மிகவும் அழகுற இந்த மேம்பாலங்கள் அமைக்கப்படவுள்ளன. அடுத்த 25 ஆண்டுகளில் ஏற்படும் போக்குவரத்துநெரிசலைக் கருத்தில் கொண்டு இந்தப் பாலங்கள் அமைக்கப்படவுள்ளன.
24 மாதங்களில் இந்தப் பாலங்கள் அனைத்தும் கட்டி முடிக்கப்படும். தாம்பரம்- மாதவரம் 4 வழிப்பாதை அமைக்கும் பணி இன்னும் 2ஆண்டுகளில் முடிவடையும்.
சென்னை நகர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நடைபெறவுள்ள இந்த மேம்பாலக் கட்டுமானப் பணிகளுக்கு தமிழக அரசு முழுஒத்துழைப்பு அளிக்கிறது. கத்திப்பாராவில் பாலம் அமைக்கும் இடத்தில் உள்ள சிட்கோ கட்டிட நிலம் தேவைப்பட்டது. இதுதொடர்பாகமாநில அரசை அணுகியபோது உடனடியாக நிலத்தை ஒதுக்கித் தந்தது. இதற்காக தமிழக முதல்வரைப் பாராட்டுகிறேன்.
இந்தியாவில் மொத்தம் 65,569 கிலோமீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இதில் 7 சதவீத சாலைகள் மட்டுமே 4 வழிப்பாதையாக உள்ளது. 58 சதவீத சாலைகள் இரு வழிப் பாதையாக உள்ளன. 35 சதவீத சாலைகள் ஒரு வழிப் பாதையாக உள்ளன. இந்தசாலைகள் அனைத்தும் முற்றிலும் தரம் உயர்த்தப்பட்ட பின்னர்தான் புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.
தங்க நாற்கர திட்டத்தின் ஒரு பகுதியாக, தேசிய ஜனநாயக ஆட்சிக் காலத்தின்போது ஒரு நாளுக்கு சராசரியாக 2.72 கிலோமீட்டர்நீளத்திற்குத்தான் சாலை அமைக்கப்பட்டது. தற்போது ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சியில் தினசரி சராசரியாக 7.45கிலோமீட்டர் அளவுக்கு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 92 சதவீத பணிகள் முடிவடைந்து விடும்.
தமிழகத்தில் 129 மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் கட்டத் திட்டமிட்டுள்ளோம். இதில் 17 ரயில்வே மேம்பாலங்கள் ஆகும், 23 பெரியபாலங்களும் கட்டப்படும் என்றார் டி.ஆர்.பாலு.
சென்னை கத்திப்பாரா சந்திப்பில் தினசரி 2லட்சத்து 73 ஆயிரத்து 806 வாகனங்கள் செல்கின்றன. நெரிசலான நேரத்தில் ஒரு மணிநேரத்திற்கு 19 ஆயிரத்து 417 வாகனங்கள் செல்கின்றன.
பாடியில் தினமும் 1 லட்சத்து 42 ஆயிரத்து 596 வாகனங்கள் செல்கின்றன. கோயம்பேடு பகுதியில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 924வாகனங்கள் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications