ராணிமேரி: ஸ்டாலினுக்கு குற்றப் பத்திரிக்கை
சென்னை:
கொலை முயற்சி வழக்கில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் உள்பட 15 திமுகவினருக்கு சைதாப்பேட்டை 9வது நீதிமன்றத்தில்குற்றப் பத்திரிக்கை வழங்கப்பட்டது.
சென்னை ராணிமேரி கல்லூரி கட்டடத்தை இடித்து அங்கு தலைமை செயலகம் கட்டப்போவதாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பைஎதிர்த்து அக்கல்லூரி மாணவிகள் தமிழக அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஸ்டாலின் உட்பட 15 திமுகவினர் ராணிமேரி கல்லூரி வளாகத்திற்குள் போலீஸாரின் தடையைமீறி உள்ளே சென்றனர். இதையடுத்து ஸ்டாலின் உட்பட 15 பேர் மீதும் போலீசார் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது:
ராணி மேரிக் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்த வழக்கில் ஸ்டாலினை கைது செய்ய வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டிற்கு போலீஸார்சென்றனர். அப்போது ஸ்டாலின் வீட்டின் வெளியே இருந்த 100 திமுக தொண்டர்கள் போலீஸாருக்கு எதிராக கோஷமிட்டனர்.
அப்போது வீட்டிலிருந்து ஸ்டாலின், போலீசை உள்ளே விடாதீர்கள். அவர்களை வெளியே தள்ளுங்கள் என்று கூறினார். அதையடுத்துபோலீஸார் ஸ்டாலினை கைது செய்ய முயன்றபோது, போலீஸாரை சிலர் தள்ளிவிட்டனர். போலீஸார் சிலர் தாக்கப்பட்டனர்.
இதற்காக ஸ்டாலின் உள்பட 9 பேர் மீது போலீசாரைக் கொல்ல முயன்ற வழக்கும், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், சேப்பாக்கம் சுரேஷ்,சின்னமலை மகேஷ், குணசேகரன், சுப்பிரமணியம், சைதை சம்பத் ஆகியோர் கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்தனர் என்றும்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கை அடுத்த மாதம் 16ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி மோகன்ராஜ் உத்தரவிட்டார்.
குற்றப் பத்திரிக்கை நகலைப் பெற்றுக் கொண்டு வெளியே வந்த ஸ்டாலின் நிருபர்களிடம், இந்தப் பொய் வழக்கை சட்டரீதியாகஎதிர்கொள்வேன் என்றார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications