ஆளுனர் உரை தமிழில் வாசிக்கப்படாது: காளிமுத்து
சென்னை:
தமிழக சட்டசபையில் ஆளுனரின் உரை தமிழில் வாசிக்கப்பட மாட்டாது என்று சபாநாயகர் காளிமுத்து திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் சட்டமன்றக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால்ஆளுனர் பர்னாலாவின் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது.
ஜெயலலிதா அரசு பதவியேற்றது முதல் ஆளுனர் உரை தமிழில் வாசிக்கப்படும் நடைமுறை தவிர்க்கப்பட்டு வருகிறது. இதற்குஎதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த ஆண்டு ஆளுனர் உரை தமிழில் வாசிக்கப்படாததைக் கண்டித்துஎதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்புச் செய்தன.
இந் நிலையில் இந்த ஆண்டும் ஆளுனர் உரை தமிழில் வாசிக்கப்படாது என்று சபாநாயகர் காளிமுத்து அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டசபைக் கூட்டத் தொடல் ஆளுனர் உரையின் தமிழ் மொழியாக்கப் பிரதிகள்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஆளுனர் உரையின் தமிழாக்கம் பேரவையில்படிக்கப்பட்டதாகக் கருதி அவை நடவடிக்கை குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மேற்கு வங்கம், பஞ்சாப், ஹரியானா, குஜராத், சிக்கிம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் ஆகியமாநிலங்களில் ஆளுனர் உரையின் மொழி பெயர்ப்பு, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் மொழியில் பேரவைத் தலைவரால்வாசிக்கப்படுவதில்லை.
ஆளுனரின் மொழிபெயர்ப்பு அடங்கிய பிரதிகள் பேரவையில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். இதே நடைமுறைதான் தமிழகத்திலும்பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே இந்த ஆண்டும் இதே முறைதான் ஆளுனர் உரை விஷயத்தில் பின்பற்றப்படும் என்று காளிமுத்துகூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications