எல்.கணேசன், 2 திமுக எம்எல்ஏக்கள் கைது
திருச்சி:
திருச்சியில் ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், மற்றும் 2 திமுக எம்.எல்.ஏக்கள் கைதுசெய்யப்பட்டனர்.
திருச்சி டோல்கேட் அருகே சுமார் 2 ஏக்கர் அரசு நிலம் பல ஆண்டுகளாக பொது மக்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில்அடுக்கு மாடி வணிக வளாகம் ஒன்று கட்டப்பட்டு இருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றவும், கட்டடத்தை இடித்து தள்ளவும் தமிழக அரசுஉத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர். ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள்தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கட்டடத்தை இடிக்க அத் தொகுதி எம்பியான எல். கணேசன், திமுக எம்.எல்.ஏக்கள் அன்பில்பெரியசாமி, சேகரன் ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீஸாருக்கும், பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் போலீஸார் தடியடி நடத்திகூட்டத்தைக் கலைத்தனர். இதில் 7 பேர் காயமடைந்தனர்.
எல்.கணேசன், அன்பில் பெரியசாமி, சேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங்












Click it and Unblock the Notifications