டிவிஎஸ் அதிகாரிகள் மீது பொய் வழக்கு: அரசுக்கு நீதிபதி கண்டனம்
சென்னை:
திருக்கோஷ்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கில் டி.வி.எஸ். நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சென்னைஉயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி அர்ச்சகர் மாதவன் சென்னையில் தாக்கப்பட்டார். போலீஸாரிடம் அவர்கொடுத்த வாக்குமூலத்தில் ஜெயேந்திரர் உத்தரவின்பேரிலேயே தன்னை ஆள் வைத்துத் தாக்கியதாகதெரிவித்திருந்தார்.
இந்த வழக்கிலும் ஜெயேந்திரரை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஜெயேந்திரர் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார். அந்த மனு நிலுவையில் உள்ளது.
இந் நிலையில் முன்னாள் கூடுதல் எஸ்பி முத்துக்கிருஷ்ணன், பொறியாளர்கள் சேஷாத்ரி, செல்வன், பி.ஆர்.ஓ.ரங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் தங்களை இந்த வழக்கில் போலீஸார் கைது செய்யக் கூடும் என்பதால் முன் ஜாமீன்வழங்குமாறு கோர சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இவர்களது மனுவை விசாரித்த நீதிபதி தணிகாச்சலம், இந்த வழக்கைப் பார்த்தால் முறையான வழக்காகதோன்றவில்லை. புணையப்பட்ட வழக்காகவேத் தோன்றுகிறது. புகார் கொடுத்த திருக்கோஷ்டியூர் மாதவன்மிகவும் சாவகமாசமாக, மிகவும் கால தாமதமாக புகார் கொடுத்துள்ளார்.
முதலில் அவர் சாலை விபத்தில் காயமடைந்ததாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பின்னர் இதுமாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கைப் பார்த்தால் அடிப்படை ஆதாரம் கூட இருப்பதாகத் தெரியவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன் ஜாமீன் வழங்குவதைத் தடுக்கும் வகையில் வலுவான ஆதாரங்கள்போலீசாரிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
எனவே மனுதாரர்கள் நான்கு பேருக்கும் முன் ஜாமீன் வழங்குகிறேன்.
அவர்கள் கைது செய்யப்பட்டாலோ அல்லது சரணடைந்தாலோ ரூ. 5,000 ரொக்கம், 2 நபர் உத்தரவாதம் மற்றும்விசாரணை அதிகாரி முன் மாதம் ஒரு முறை நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜாமீனில்விடுவிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
ஜாமீன் வழங்கப்பட்ட நால்வரும் டிவிஎஸ் நிறுவன ஊழியர்களாவர். இவர்கள் மீதான வழக்கு பொய்யாகபுனையப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications