வேல்துரையிடம் விடிய விடிய விசாரணை
திருநெல்வேலி:
ஆலடி அருணா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள வேல்துரையை போலீஸ் காவலில் எடுத்துள்ளதனிப்படை போலீஸார் அவரை ஆலங்குளம் அருகே வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே ஆலம்பட்டி கிராமத்தில் கடந்த டிசம்பர் 31ம் தேதி ஆலடி அருணா வெட்டியும், துப்பாக்கியால்சுட்டும் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக டாக் ரவி, அழகர், ஆறுமுகம், பரமசிவம், கண்ணன் ஆகியோர்கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கைதான இன்னொரு குற்றவாளியான ஆட்டோ பாஸ்கர் போலீஸ் காவலில் இருந்தபோது மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கில்முக்கியக் குற்றவாளிகளான பென்னி மற்றும் வேல்துரையை போலீஸார் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வைத்து போலீசார் பிடித்தனர்.இதில் பென்னியும் மர்மாக இறந்தான். அவன் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் சொல்கிறது.
வேல்துரை மட்டுமே பிடிபட்டான். அவனை பலத்த பாதுகாப்புடன் தமிழகத்திற்குக் கொண்டு வந்த போலீஸார் தென்காசி நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தினர்.
அப்போது வேல்துரையை 10 நாள் போலீஸ் காவலில் வைக்க அனுமதி கோரி ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் சோமசேகரன் மனு தாக்கல்செய்தார்.
ஆனால் வேல்துரையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலசுப்ரமணியம் அதை எதிர்த்தார். ஏற்கனவே போலீஸ் விசாரணையின்போது 2பேர் இறந்துள்ளனர். இந் நிலையில் போலீசிடம் ஒப்படைத்தால் வேல்துரைக்கும் அதே கதிதான் ஏற்படும். எனவே போலீஸ் காவல்அளிக்கக் கூடாது என்று அவர் வாதாடினார்.
பின்னர் அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தைக் கேட்ட நீதிபதி அனில்குமார், வேல்துரையை 3 நாள் மட்டும் காவலில் வைத்துவிசாரிக்க போலீஸாருக்கு அனுமதி அளித்தார்.
31ம் தேதி மாலை 5.30 மணிக்கு வேல்துரையை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து வேல்துரை பலத்த பாதுகாப்புடன் ஆலங்குளம் அருகே உள்ள காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்குவைத்து நேற்றிரவு முழுவதும் விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையே, வேல்துரை கொடுத்துள்ள தகவல்களின்படி, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியப் புள்ளி இன்னும் ஓரு நாட்களில்கைது செய்யப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications