மாணவிகளின் மானத்தை காப்பாற்றிய சாலை விபத்து
சென்னை:
சென்னையில் 4 பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டனர். அவர்கள் கடத்தப்பட்ட ஆட்டோ விபத்தில் சிக்கியதால், அதிர்ஷ்டவசமாகஅந்த மாணவிகளின் வாழ்க்கை காப்பாற்றப்பட்டது.
சென்னை அமைந்தகரை புல்லா அவென்யூ மெயின் ரோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 10ம் வகுப்புபடித்து வருபவர்கள் அஸ்வினி, சரண்யா மற்றும் 9ம் வகுப்பு படித்து வருபவர்கள் திவ்யா, ராஜலட்சுமி.
இவர்கள் நான்கு பேரும் பள்ளிக் கூடம் சென்றனர். ஆனால் மாலையில் வழக்கமான நேரத்தில் இவர்கள் வீடு திரும்பவில்லை.இதையடுத்து அவர்களது பெற்றோர் பள்ளியில் விசாரித்தனர். அப்போது அவர்கள் பள்ளிக்கே வரவில்லை என்பதுதெரியவந்தது. இதைத் தொடர்ந்து அமைந்தகரை போலீஸில் பெற்றோர்கள் புகார் செய்தனர்.
மாணவிகளை யாரேனும் கடத்திச் சென்றிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகித்தனர். இந் நிலையில், மறைமலை நகர் அருகேகாட்டாங்கொளத்தூரில் ஒரு ஆட்டோ விபத்தில் சிக்கியது. அதில் இந்த நான்கு மாணவிகளும் பயணித்தனர். ஆட்டோவில்பரசுராமன், வாசு, முரளி, ஸ்ரீதர் ஆகியோர் இருந்துள்ளனர்.
விபத்தில் அனைவரும் காயமடைந்தனர். விபத்தில் சிக்கிய மாணவிகளை மீட்ட அப்பகுதியைச் சேர்ந்தோர் போரூர் ராமச்சந்திராமருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் 4 மாணவிகளும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.காயமடைந்த பரசுராமன் உள்ளிட்டோர் மருத்துவமனையிலிருந்து தப்பி விட்டனர்.
மாணவிகளிடம் டாக்டர்களும், போலீஸாரும் விசாரித்தபோதுதான் உண்மை தெரியவந்தது. காஞ்சிபுரம் போவதாக கூறி அந்தமாணவிகளை பரசுராமன் கோஷ்டியினர் கடத்தி வந்துள்ளனர். அவர்களுக்கும், மாணவிகளுக்கும் இடையே வெகு நாட்களாகபழக்கம் இருந்து வந்துள்ளது. அதைப் பயன்படுத்தி நான்கு மாணவிகளையும் ஏமாற்றி கடத்த முயன்றது தெரியவந்தது.
பரசுராமன் உள்ளிட்ட நான்கு பேரும் கோயம்பேடு பஸ் நிலையப் பகுதியில் ஆட்டோ டிரைவர்களாக உள்ளனர். இவர்களுடன்சரவணன் என்பவரும் வந்துள்ளார். அவர்தான் விபத்தில் சிக்கிய ஆட்டோவை ஓட்டி வந்துள்ளார். போலீஸார் இது தொடர்பாகவழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications