சுனாமி: நாகை புயல் வேக நிவாரண பணி!
நாகப்பட்டினம்:
நாகையில் சுனாமி அலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தற்காலிக வீடுகள் அமைத்துத் தரும் பணியை அம் மாவட்ட நிர்வாகம்முடித்துவிட்டது.
மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட இம் மாவட்டத்தின் கலெக்டராக தஞ்சை ஆட்சியர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்துநிவாரணப் பணிகள் பெரும் வேகம் பெற்றன.
இந் நிலையில் நாகையில் மாவட்ட அளவில் எம்.எல்.ஏக்கள், நகராட்சி மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் கலந்து கொண்ட சுனாமிநிவாரண ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன்,
நிவாரணப் பணிகளின் முதல் கட்டமாக வீடிழந்த அனைவருக்கும் தற்காலிக வீடுகள் அமைத்துத் தரும் பணியை முடித்துவிட்டோம்.இரண்டாவது கட்டத்தில் நிரந்தர குடியிருப்பு, வேலைவாய்ப்பு, மீனவர்களுக்கு படகுகள், வலைகள் உள்ளிட்டவற்றை வழங்கும் பணிநடைபெறும்.
மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையானஅனைத்து உதவிகளையும், நிவாரணப் பொருட்களையும் கடந்த மாதம் 27ம் தேதி முதல் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில்வழங்கி வருகிறது.
கடந்த 30 ஆண்டுகளில் பல முறை வெள்ளம் மற்றும் புயலால் இந்த மாவட்டம் பாதிக்கப்பட்டிருந்தாலும், அந்த தாக்குதல்களினால்மொத்தம் 3,000 பேர் மட்டுமே இறந்தனர். ஆனால் கடந்த மாதம் 26ம் தேதி நடந்த தாக்குதலில் மட்டும் 6,000க்கும் அதிகமானோர்இறந்துவிட்டனர்.
மீனவர்களுக்கு மட்டுமே நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதாக கூறப்படும் புகார்களைக் களையும் விதத்தில், பாதிக்கப்பட்டஅனைவருக்கும் முதல்வர் ஜெயலலிதா நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார் என்றார்.
டி.வி.எஸ். குழுமம் 3 கிராமங்களில் கட்டித் தந்துள்ள 300 தற்காலிக வீடுகளையும் திறந்து வைத்து பாதிக்கப்பட்டவர்களிடம்ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
அதே போ அமெரிக்காவைச் சேர்ந்த குளோபல் அப்லிப்ட் என்ற தொண்டு நிறுவனமும் முன்னாள் தமிழக ஆளுநர் கே.கே.ஷாவின்அறக்கட்டளையும் இணைந்து கட்டிய 162 தற்காலிக வீடுகளை மாவட்ட உதவி ஆட்சியர் உமாநாத் பாதிக்கப்பட்டவர்களுக்குவழங்கினார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications