சங்கரராமன் கொலை: விஜயேந்திரரின் பங்கு ரூ. 15 லட்சம்- ரகு வாக்குமூலம்!
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலைக்கு தனது பங்காக இளைய சங்கராச்சாயாரிர் விஜயேந்திரர் ரூ. 15 லட்சம் வழங்கியதாக போலீசாரிடம் ரகுகூறியுள்ளார்.
சங்கரராமன் கொலையில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், ரகு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் விஜயேந்திரர்தான்கடைசியாக கைது செய்யப்பட்டார். அவருக்கும், கொலைச் சதிக்கும் பெரிய அளவில் தொடர்பு இல்லை என்று ஆரம்பத்தில் தனிப்படைபோலீஸார் நினைத்து வந்தனர்.
ஆனால் விஜயேந்திரன் தம்பி ரகுவிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போதுதான் விஜயேந்திரருக்கும் இதில் முக்கியப் பங்கு இருப்பதுதெரியவந்தது. பின்னர் ரவி சுப்பிரமணியமும் இளையவர் குறித்து பல தகவல்கள் தந்தார். இதையடுத்தே விஜயேந்திரர் கைதுசெய்யப்பட்டார்.
போலீஸாரிடம் ரகு கொடுத்த வாக்குமூலம் குறித்த தகவல்கள் தற்போது கசியத் தொடங்கியுள்ளன. ரகுவின் வாக்குமூலத்தில் சில முக்கியபகுதிகள்:
கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி ரவி சுப்பிரமணியம், அப்பு, கதிரவன் ஆகியோர் எனது சகோதரர் விஜயேந்திரரை வந்து பார்த்தனர்.சங்கரராமனைத் தீர்த்துக் கட்ட ஜெயேந்திரர் உத்தரவிட்டுள்ளதைத் தெரிவித்தனர். அதைக் கேட்டதும் சரி செய்து விடுங்கள் என்றுவிஜயேந்திரர் கூறினார்.
பின்னர் என்னைப் பார்த்து, இத் திட்டத்தில் நமது பங்காக பணத்தைக் கொடுத்து விடுமாறு விஜயேந்திரர் உத்தரவிட்டார்.
இதையடுத்து எனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் கடிகாஸ்ரமம் அறக்கட்டளை, எஸ்எஸ்எஸ்விஎஸ் அறக்கட்டளை ஆகியவற்றின்கணக்கிலிருந்து ரூ. 5 லட்சம் பணத்தை சங்கரராமன் கொலை செய்யப்பட்ட செப்டம்பர் 3ம் தேதி ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியிலிருந்து எடுத்தேன்.
ரெசிடென்சி பில்டர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் அந்தப் பணத்தை டி.டியாக மாற்றினேன்.
ரெசிடென்சி பில்டர்ஸ் நிறுவனத்தினர் டிடியை பணமாக மாற்றி செப்டம்பர் 5ம் தேதி அதை என்னிடம் திருப்பித் தந்தனர்.
நான் அந்தப் பணத்தை அன்று இரவே ஜெயேந்திரரிடம் ஒப்படைத்தேன். அவர் அப்புவிடம் ரூ. 10 லட்சம் பணத்தைக் காடுத்தார்.
அதன் பின்னர் சில நாட்கள் கழித்து விஜயேந்திரர் என்னிடம், ஜெயேந்திரர் ரூ. 20 லட்சம் கேட்டதாக கூறினார். போலி குற்றவாளிகளைசரணடைய வைப்பதற்காகவும், 3 மோட்டார் சைக்கிள்கள் வாங்குவதற்காகவும் இந்தத் தொகை தேவைப்படுவதாகவும் அவர்தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து செப்டம்பர் 30ம் தேதி இரவு ரூ. 10லட்சம் பணத்தை ஜெயேந்திரரிடம் ஒப்படைத்தேன்.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதலில் எனக்குப் பெரிய அளவில் தொடர்பு இல்லை. ஜெயேந்திரரின் உத்தரவுப்படி, ராதாகிருஷ்ணனின்புகைப்படத்தை மட ஆல்பத்திலிருந்து பிரித்து எடுத்து, அதன் பின்புறம் அவரது முகவரியை எழுதி ரவி சுப்பிரமணியத்திடம் கொடுத்தேன்.
இவ்வாறு ரகு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications