"அம்மா"வுடன் கை கோர்க்க தயார்: ராஜேந்தர்
மதுரை:
சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிடத் தயாராக இருப்பதாக லட்சிய திமுக தலைவரும், இயக்குனருமான விஜய டிராஜேந்தர் கூறியுள்ளார்.
லதிமுக தலைவரான அவர் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எனது கட்சிக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. வரும் சட்டசபைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம்.
தொகுதிக்கு 10,000 ஓட்டுக்களை பெறுவோம். அதிமுகவுடன் சேர்ந்து போட்டியிட தயாராக உள்ளோம். எங்களது பலத்தை அறிந்துஎங்களை அதிமுக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
திமுகவுக்கு எதிரான பிரச்சார பீரங்கியாக நான் இருக்கப் போகிறேன். எனது திறமையைப் பார்த்துத்தான் திமுகவில் ஏழரை ஆண்டுகாலம்கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை எனக்கு கருணாநிதி கொடுத்தார்.
ராமதாஸ், திருமாவளவன் ஆகியோரின் தமிழ் பற்றுதலை நான் வரவேற்கிறேன். எனது படங்களில் தமிழில்தான் பெயர் சூட்டுவேன்.ஆனால் அவர்களது கோரிக்கையை சட்டமாக்க முடியுமா? அதை அவர்கள் செய்தால் அதை வரவேற்பேன்.
ஆனால் படத்தை ஓட விடமாட்டேன் என்று எச்சரிக்கை விடுப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அதனால்தான் அதை முதல்வர்ஜெயலலிதா கண்டித்துள்ளர்.
ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை குறித்து கருணாநதி கருத்து சொல்லாமல் இருப்பது ஏன்? கருத்து சொன்னால் ஓட்டுக்கு வேட்டு வந்துவிடும் என்று பயப்படுகிறாரா?. ஆனால் ஜெயலலிதா துணிச்சல் மிக்கவர். அவரது துணிச்சலை பாராட்டுகிறேன்.
ஜெயேந்திரர் ஜாமீனில் விடுதலையான உடனேயே விஜயேந்திரரை கைது செய்த துணிச்சல் யாருக்கு வரும்? என்றார் ராஜேந்தர்.. ஸாரிவிஜய டி.ராஜேந்தர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications