ஆசிரியை மாயமான வழக்கு: போலீஸ் மீது கணவர் புகார்
திருச்சி:
குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில் போலீஸார் தங்களது குடும்பத்தை மனரீதியாக சித்திரவதை செய்துவருவதாக ஆசிரியையின் கணவர் ஜோதி ராமலிங்கம் புகார் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை பள்ளியில் வேலை பார்த்து வந்த மீனாட்சி என்ற ஆசிரியையைக் காணவில்லை. அவரை குளித்தலைஎம்.எல்.ஏ. பாப்பாசுந்தரம், அவரது மகன் கருணாகரன் ஆகியோர்தான் கடத்திச் சென்றிருக்கக் கூடும் என்று கூறி மீனாட்சியின் கணவர்ஜோதி ராமலிங்கம் போலீஸில் புகார் கொடுத்தார்.
ஆனால் அந்தப் புகாரின் மீது குளித்தலை போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றக்கிளையை நாடினார் ஜோதி ராமலிங்கம்.
குளித்தலை போலீஸாரின் அலட்சியம், தாமதப்படுத்தும் நோக்கு, குளறுபடியான விசாரணை ஆகியவற்றை மதுரை உயர்நீதிமன்றக் கிளைகடுமையாக கண்டித்தது. இந்த விவகாரம் தொடர்பாக டிஜிபி அலெக்சாண்டர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டியநிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் பாப்பாசுந்தரத்தின் மகன் கருணாகரன், அவரது உறவினர்கள்உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மீனாட்சியின் கணவர் ஜோதி ராமலிங்கத்தையும் அவர்கள் சென்னைக்கு அழைத்துவிசாரித்தனர்.
இந் நிலையில் சிபிசிஐடி போலீஸார் தங்களை மனரீதியாக சித்திரவதை செய்வதாக ஜோதி ராமலிங்கம் புகார் தெவித்துள்ளார்.இதுதொடர்பாக டிஜிபிக்கும் அவர் புகார் அனுப்பியுள்ளார்.
அந்த புகாரில், எனது சகோதரர் பசுபதி சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் பேட்டி அளித்தபோது, எங்களது குடும்பத்தில் உள்ளவர்கள்அனைவரையும் போலீஸார் மிரட்டுகிறார்கள், இதுதொடர்பாக மனித உரிமை ஆணையத்தை அணுக முடிவு செய்துள்ளோம் என்றுதெரிவித்திருந்தார்.
இதற்கு அடுத்த நாளே என்னை விசாரணைக்கு வரச் சொல்லி சென்னை சிபிசிஐடி அலுவலகத்திலிருந்து அழைத்தார்கள். அங்கு என்னிடம்விசாரணை என்ற பெயரில் மிக ஆபாசமாக திட்டினார்கள், அறுவறுக்கத்தக்க கேள்விகளைக் கேட்டு என் மனதை நோகடித்தார்கள்.
மேலும், நாங்கள் சித்திரவதை செய்யவில்லை என்று எழுதிக் கொடுக்குமாறும் மிரட்டினார்கள் என்று ஜோதி ராமலிங்கம் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சரும் அதிமுக எம்எல்ஏவுமான பாப்பா சுந்தரத்தை காப்பாற்றும் வேலைகளிலேயே போலீசார் அதிகஆர்வம் காட்டுவதாக புகார் கூறப்படுகிறது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications