டூ வீலர் ஆம்புலன்ஸ்கள்: சென்னையில் அறிமுகம்
சென்னை:
நாட்டிலேயே முதன் முறையாக சென்னை, டெல்லி, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இரு சக்கர ஆம்புலன்ஸ்களைஅபல்லோ மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் நான்கு சக்கர ஆம்புலன்ஸ்கள் வேகமாக செல்வதில் இடையூறு இருப்பதால் ஏராளமானஉயிர்ச் சேதங்கள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்கவே இரு சக்கர ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:
அபல்லோ பர்ஸ்ட் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த வாகனத்தின் ஓட்டுனரும், பின் இருக்கையில் அமர்ந்திருப்பவரும் முதலுதவிசிகிச்சைக்கான பயிற்சியைப் பெற்றிருப்பார்கள். மேலும் எலும்பு முறிவு, இதயத் துடிப்பை சீராக்கும் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளும்அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.
இந்த இரு சக்கர ஆம்புலன்ஸ் நோயாளிகளுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளிக்கவும், நான்கு சக்கர வாகனங்களுக்குவழிகாட்டியாகவும் பயன்படும்.
விபத்து நடந்த இடத்திற்கு 4 சக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதில் இருக்கும் சிரமத்தை உணர்ந்து, இந்த இரு சக்கர ஆம்புலன்ஸ்திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனையின் தேசிய அவசர சிகிச்சைப் பிரிவு இயக்குனர் டாக்டர் ஹரி பிரசாத் உருவாக்கினார்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள் தவிர, 4 சக்கர வாகனங்கள் தடை செல்லத் தடை விதிக்கப்பட்ட பகுதிகளிலும் இந்த இரு சக்கரஆம்புலன்ஸ்கள் செல்ல முடியும் என்று தெரிவித்தார்.
முன்னதாக இத்தகைய ஆம்புலன்ஸ் இரண்டை டாக்டர் பிரதாப் ரெட்டி மற்றும் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் நடராஜ்ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
நடராஜ் பேசுகையில், சென்னையில் 250 அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் இருப்பினும் போக்குவரத்து நெரிசல் காரணமாக விபத்துநடக்கும் இடங்களுக்குச் செல்ல தாமதம் ஏற்படுகிறது. இதனால் ஏராளமான உயிரிழப்பு ஏற்படுகிறது என்றார்.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications