கர்நாடக இசை மேட்டுக்குடி இசை: ராமதாஸ்
சென்னை:
சைக்கிள் பாகங்களுக்கு தமிழ்ச் சொற்களை உருவாக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும் என்று பாமக நிறுவனர்ராமதாஸ் கூறியுள்ளார்.
சட்டசபையில் நேற்று பாமக தலைவர் ஜி.கே. மணி, தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதைத் தடை செய்யவேண்டும் என்றும் முடிந்த அளவு தூய தமிழில் பேச வேண்டும் என்றும் கூறினார்.
அதற்குப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, முதலில் சைக்கிள் பாகங்களுக்கு தமிழில் என்ன பெயர் என்று ஜி.கே. மணி கூறட்டும்என்றார். அதை அமைச்சர்களும் வற்புறுத்த, விளக்கம் தர முடியாமல் மணி தடுமாறினார்
.இந் நிலையில், சென்னையில் இன்று கொங்கு தமிழ் அறக்கட்டளை சார்பில் தமிழிசை பயிற்சி விழாவை பா.ம.க. நிறுவனர் டாக்டர்ராமதாஸ் தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
சட்டசபையில் ஜெயலலிதா, சைக்கிள் பாகங்களுக்கு தமிழில் என்ன பெயர் என்று கேட்டு, அதற்கு தமிழ் வார்த்தைகளே இல்லைஎன்று கூறியிருக்கிறார். அதை தமிழ்ப் பல்கலைக்கழகம் மூலம் ஆராய்ந்து பெயர்களை உருவாக்க வேண்டியது தமிழக அரசின்கடமையாகும்.
கம்ப்யூட்டரை கணிணி என்றும், சி.டியை குறுந்தகடு என்றும் பேக்ஸை தொலைநகல் என்றும் தமிழில் கூறுவதில்லையா?அதுபோல சைக்கிள் பாகங்களை தமிழ்ப்படுத்துவதும் பெரிய காரியமல்ல.
ஜெயலலிதா அவ்வாறு பேசும்போது, நன்கு தமிழ் தெரிந்த சபாநாயகர் காளிமுத்துவும் அமைதியாக இருந்திருக்கிறார்.
தமிழில் குழந்தை பிறந்தது முதல் இறந்து போகும் வரை தாலாட்டு, கும்மி, நலுங்கு, ஒப்பாரி என பல பாடல்கள் உள்ளன.இதுபோன்று உலகில் வேறு எங்கும் கிடையாது.
தமிழிசைதான் மக்களுக்குப் புரியும். ஒன்றும் புரியாத கர்நாடக இசைக்கு மேட்டுக்குடி மக்கள் தலையாட்டுகிறார்கள். அது நமதுபாட்டு கிடையாது. நமது பாட்டு என்றால் அது தமிழிசைதான்.
தமிழ் சினிமா பாடல்கள் மிக அசிங்கமாக உள்ளன. அவற்றை காது கொடுத்துக் கேட்க முடியவில்லை.
தமிழ் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டினால் தமிழகத்தில் எங்கும் திரையிட விட மாட்டோம் என்றார் ராமதாஸ்.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு












Click it and Unblock the Notifications