செளதியில் இந்தியரின் தலை துண்டிப்பு
ரியாத்:
செளதி அரேபியாவில் இந்தியரை எரித்துக் கொன்ற இந்தியருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
முன் விரோதம் காரணமாக கெளதம் கிருஷ்ணா என்ற இந்தியர், சென்னையைச் சேர்ந்த இக்பால் என்பவரை தூங்கிக்கொண்டிருந்தபோது எரித்துக் கொன்றார். விசாரணையில் இக்பால் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
அதன்படி செளதி அரேபியாவின் தெற்குப் பகுதியிலுள்ள அஷீர் என்ற இடத்தில் கெளதமின் தலை பொதுமக்கள் முன்னிலையில்சீவப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கடந்த ஜனவரி 1ம் தேதியிலிருந்து செளதி அரேபியாவில் மரண தண்டனை அடைந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆகஉயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு 35 பேரும், அதற்கு முந்தைய ஆண்டு 52 பேரும் செளதி அரேபியாவில் மரண தண்டனைக்கு உள்ளாயினர்.அவர்களில் பெரும்பாலானவர்கள் போதை மருந்து கடத்தலின்போது பிடிப்பட்டவர்கள்.
இஸ்லாம் விதிகள் கடுமையாகப் பின்பற்றப்படும் செளதி அரேபியாவில் போதை மருந்துக் கடத்தல், கொலை, கொள்ளை,கற்பழிப்பு ஆகிய குற்றங்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது வழக்கமாகும்.
-
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு












Click it and Unblock the Notifications